அந்த 'கொழந்த' எனக்கு பொறக்கல... அதான் 'கொலை' பண்ணேன்... வேலூரை அதிரவைத்த 'இளைஞர்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த லாவண்யா என்பவர், முதல் திருமணத்தில் ஏற்பட்ட தகறாரின் காரணமாக அவரை பிரிந்து பிரவீன்குமார் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இரண்டாவது கணவரிடம் முதல் திருமணம் குறித்து கூறிய நிலையில் அதில் பிறந்த குழந்தை குறித்து மறைத்து வந்துள்ளார்.

அந்த 'கொழந்த' எனக்கு பொறக்கல... அதான் 'கொலை' பண்ணேன்... வேலூரை அதிரவைத்த 'இளைஞர்'!

தனது அக்காவின் குழந்தை என கூறி தனது இரண்டு வயது குழந்தையை லாவண்யா வளர்த்து வந்த நிலையில், பிரவீன் குமாருக்கு உண்மை நிலவரம் தெரிய வந்துள்ளது. இதனால் இருவருக்குள்ளும் ஏற்பட்ட தகராறில் குழந்தையை பிரவீன் குமார் கொன்றுள்ளார். முதலில் கொலை என்பதை மறைத்த நிலையில், லாவண்யாவின் முதல் கணவர் அளித்த புகாரில் அதிர்ச்சி பின்னணி வெளியானது.

இதையடுத்து கைதான பிரவீன் குமார் தான் குழந்தையை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், 'குழந்தை கலைரஞ்சினி எனது குடும்ப வாழ்க்கைக்கு இடையூறாக இருந்தாள். திருமணமான சில நாட்களிலேயே இது என் மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த குழந்தை என்பதை தெரிந்து கொண்டேன். குழந்தையை மாமியாரிடம் கொடுத்து விடும்படி கூறியும் மனைவி கேட்கவில்லை.

இதன் காரணமாக கோபத்தில் இருந்த நான், ஒரு நாள் மதுஅருந்தி விட்டு வீட்டிற்கு வந்தேன். அப்போது குழந்தையை பார்த்த எனக்கும் மேலும் கோபம் தலைக்கேற குழந்தையை தூக்கி வீசினேன். இதில் சுவற்றில் மோதி விழுந்த குழந்தை அப்போதே இறந்து விட்டது. போலீசாரிடம் சிக்கி விடுவோம் என்ற பயத்தில் குழந்தைக்கு வலிப்பு உள்ளதாக கூறி நாடகமாடினோம். அதே போல, இந்த குழந்தை எனக்கு பிறக்கவில்லை. அதனால் தான் கோபத்தில் அப்படி செய்துவிட்டேன்' என தெரிவித்துள்ளார்.

இரண்டு வயது குழந்தையை கொலை செய்த வழக்கில் கைதான பிரவீன் குமாரின் வாக்குமூலம் அப்பகுதி மக்களை மேலும் பதட்டமடைய செய்துள்ளது.

மற்ற செய்திகள்