டவுட் வராம க்ளோஸ் பண்ணனும்னா 'சாம்பார்' தான் ஒரே வழி! கணவனை தீர்த்துக்கட்ட மனைவியின் மாஸ்டர் பிளான்.. அதிர வைக்கும் வாக்குமூலம்
முகப்பு > செய்திகள் > தமிழகம்வேதாரண்யம்: நாகபட்டினத்தை சேர்ந்த பெண் ஒருவர் சாம்பாரை ஆயுதமாகக் கொண்டு அரங்கேற்றிய கொடூரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள சடையன்காடு பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன்(47 வயது). கீழையூர் ஒன்றிய கவுன்சிலர். இவரது மனைவி சூர்யா (26 வயது). இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன் மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். பின்னர் கடந்த மாதம் 15-ஆம் தேதி வீடு திரும்பியுள்ளார்.
இந்த நிலையில் கடந்த 4-ஆம் தேதி அவருக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், திருச்சி தில்லைநகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், கடந்த 6-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இதனையடுத்து தேவேந்திரனின் உடல் அன்றே அவரது ஊருக்கு கொண்டு வரப்பட்டு வேகமாக இறுதிசடங்கு நடைபெற்றது.
செல்போனை ஆய்வு செய்தபோது அதிர்ச்சி:
இந்த நிலையில் தேவேந்திரனின் இறப்புக்கு பிறகு அவரது மனைவி சூர்யா, கணவன் இறந்த துக்கம் எதுவும் இல்லாமல் மகிழ்ச்சியாக தினமும் செல்போனில் சிறிது பேசி வந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த தேவேந்திரனின் உறவினர் சதீஷ்கண்ணா என்பவர் சூர்யாவின் செல்போனை பறித்து ஆய்வு செய்த போது தேவேந்திரன் மனைவி சூர்யாவுக்கும், அவரது வீட்டில் கடந்த 15 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த அதே பகுதியை சேர்ந்த இன்ஜினீயர் சந்திரசேகரன் (32 வயது ) என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து சதீஷ்கண்ணா கொடுத்த புகாரின் பேரில் வேட்டைக்காரனிருப்பு காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தினர்.
சாம்பார் வைத்து போட்ட திட்டம்:
மனைவி சூர்யா அளித்துள்ள வாக்குமூலம் குறித்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 'சூர்யா வீட்டின் வறுமையை பயன்படுத்தி தேவேந்திரனின் வீட்டார் கட்டாய கல்யாணம் செய்து வைத்துள்ளனர். திருமணம் முடித்தபின் தனக்கு பிடிக்காத ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். எனவே, வீட்டில் வேலைக்கு சேர்ந்த சந்திரசேகரனுக்கும் சூர்யாவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
இது ஒரு கட்டத்தில் தேவேந்திரனுக்கு தெரியவரவே அவர் மனைவியை கண்டித்துள்ளார். இதனால் வெறியான இருவரும் தேவேந்திரனை கொன்று விடலாம் என்ற முடிவுக்கு வந்தனர். உடனே கொலை செய்து விட்டால் வெளியே மாட்டிக் கொள்வோம் என்பதால், தேவேந்திரன் சாப்பிடும்போது, சாம்பாரில் அடிக்கடி கொஞ்சம் கொஞ்சமாக விஷத்தை கலந்து கொடுத்து உடலில் பாதிப்பை உருவாக்க விஷம் கொடுத்துள்ளனர்.
இருவரும் கைது:
எனவே, தேவேந்திரனுக்கு மஞ்சள் காமாலை, கல்லீரல் பிரச்னை ஏற்பட்டு திருச்சியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தேவேந்திரன் உயிரிழந்தும், உடலை அவசர அவசரமாக தகனம் செய்ததும் தெரியவந்தது என தெரிவித்தனர். இதுகுறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மற்ற செய்திகள்