'துடிதுடித்த புதுமண பெண்'... 'புதுமாப்பிளையின் கண் முன்பே நடந்த கொடூரம்'... நிலைகுலைந்த குடும்பம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருமணம் ஆன ஒரு மாதத்தில், கணவன் கண்முன்பே புதுமண பெண் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் மெய்யரசு. இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அவருடைய மனைவி சங்கீதா (28). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பார்மசி பயிற்சி கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு மாதம் தான் ஆகிறது. இந்நிலையில் புதுமண தம்பதிகள் நேற்று மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர்.
காலை 9 மணி அளவில் பவானியை அடுத்த சித்தோடு ஐ.ஆர்.டி.டி. என்ஜினீயரிங் கல்லூரி அருகே சென்றபோது, பின்னால் கோழிகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. மோதிய வேகத்தில் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
இதில் சங்கீதா மூளை சிதறி தலை நசுங்கி கணவன் கண்முன்பே துடி துடித்து இறந்தார். விபத்து நடந்ததும் டிரைவர் லாரியை நிறுத்தாமல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். விபத்தை நேரில் பார்த்த மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்கள்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் படுகாயம் அடைந்த மெய்யரசுவை ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். திருமணம் ஆன ஒரு மாதத்தில் புதுமண பெண் உயிரிழந்துள்ள சம்பவம் ஒட்டுமொத்த குடும்பத்தையும் நிலைகுலைய செய்துள்ளது.