‘திருநங்கையாக மாறிய கணவர்’... ‘ஜீவனாம்சம் கேட்ட மனைவி’... ‘நீதிமன்றம் அளித்த தீர்ப்பு’... சென்னையில் நடந்த சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருநங்கையாக மாறிய கணவரிடமிருந்து ஜீவானம்சம்  கோரி, மனைவி தாக்கல் செய்த மனுவில் சைதாப்பேட்டை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

‘திருநங்கையாக மாறிய கணவர்’... ‘ஜீவனாம்சம் கேட்ட மனைவி’... ‘நீதிமன்றம் அளித்த தீர்ப்பு’... சென்னையில் நடந்த சம்பவம்!

சென்னையை சேர்ந்த மணிமேகலை என்ற பெண், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் ‘எனக்கு கடந்த 1998 ஆம் ஆண்டு ராமானுஜம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. ஆனால் எங்களுக்குள் எந்த தாம்பத்திய உறவும் ஏற்படவில்லை. இதனால் மருத்துவரை அணுகினோம். அப்போது, மருத்துவர் சிகிச்சை எடுத்தால் சரியாகிவிடும் என்று தெரிவித்தார். இருந்தும் சரியாகவில்லை. இந்நிலையில் தத்து குழந்தை எடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்தோம். அதற்கு அவரது உறவினர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.

பின்னர் என்னை துன்புறுத்தி கடந்த 2009-ம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார்கள். எனவே எனக்கு தங்குவதற்கு ஒரு வீடு, ரூ. 10 லட்சம் பணம், மற்றும் மாதம் சாப்பாட்டிற்கு  ரூ. 5 ஆயிரம் ஜீவனாம்சம் ஆகியவற்றை, ராமானுஜம் வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறியிருந்தார். இந்த மனு, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்தில் ஆஜாரான ராமானுஜம் தான் திருநங்கையாக மாறிவிட்டதாக தெரிவித்தார். அதற்கு அரசு வழங்கிய ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் சமர்பித்தார்.

பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதி, இரு தரப்பு வாதங்களையும் கேட்டப் பின்னர், ‘இந்த வழக்கில் மனுதாரரின் கணவர் ராமானுஜம் தன்னை ஒரு திருநங்கை என்று ஆதாரங்களுடன் விசித்திரமாக தெரிவித்துள்ளார். அவரே பணம் இல்லாமல், பிச்சை எடுத்து சாப்பிட்டு, அரசு ஆதரவில் வாழ்ந்து வருவதாக கூறியுள்ளார். திருமணம் முடிந்து, கணவன் மனைவி என்ற உறவு முழுமையாக ஏற்பட அவசியமான தாம்பத்திய உறவு பூர்த்திடையவில்லை என்று இருவரும் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளனர்.

எனவே இருவரையும் கணவன், மனைவி என்று தகுதியை அடைந்ததாக கருத இயலாது. மேலும், இந்து திருமணத்தில் கணவன், மனைவிக்கு இறக்கும் வரை ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்பதை மறுப்பதிற்கில்லை. இருவருக்கும் திருமணமாகிவிட்டது என்பதாலேயே ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட இயலாது’ என்று கூறி உத்தரவிட்டார்.

ALIMONY, SAIDAPET, COURT, HUSBANDANDWIFE