நைட் 'கரண்ட்' கட் ஆயிருக்கு... 'டார்ச்' லைட் வெளிச்சத்துல... ஹாலுக்கு வந்து பார்த்த 'மனைவி'க்கு... இடியாய் காத்திருந்த துயரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை அம்பத்தூர் சூரபட்டு மதுரா மேட்டூர் நான்காவது தெருவை சேர்ந்தவர் ராம்தாஸ். எலக்ட்ரீசியனாக இவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவரின் மனைவி தமிழ்செல்வி. இந்த தம்பதியருக்கு இரண்டரை வயதில் ஒரு மகனும், ஒன்றரை வயதில் இன்னொரு மகனும் உள்ளனர்.

நைட் 'கரண்ட்' கட் ஆயிருக்கு... 'டார்ச்' லைட் வெளிச்சத்துல... ஹாலுக்கு வந்து பார்த்த 'மனைவி'க்கு... இடியாய் காத்திருந்த துயரம்!

ஊரடங்கு காரணமாக பணிக்கு செல்லாமல் ராம்தாஸ் இருந்து வந்த நிலையில், தினமும் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வரும் பழக்கத்தை கொண்டிருந்தார். இதன் காரணமாக கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதே போல கடந்த 27 ஆம் தேதியன்று இரவு வீட்டிற்கு வந்த ராம்தாஸ் மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்துள்ளதாக தெரிகிறது. நள்ளிரவு வரை இந்த தகராறு நீடித்துள்ளது. பின்னர் தனது குழந்தைகளுடன் தமிழ்செல்வி, பெட்ரூமில் தூங்கச் சென்று விட்டார்.

அப்போது இரவு மின்தடை ஏற்பட, தூங்கி கொண்டிருந்த தமிழ்செல்வி, டார்ச் லைட் வெளிச்சத்தில் ஹாலில் வந்துள்ளார். அப்போது ஏதோ இருட்டில் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து பயந்து போன தமிழ்செல்வி அலறித் துடித்துள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு ராம்தாஸின் உறவினர்கள் அங்கு வந்தனர். தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த ராமதாஸை பார்த்து அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் ராம்தாஸை மீட்டு அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மது பழக்கத்திற்கு அடிமையான நிலையில், மது குடிக்க பணம் கேட்டு மனைவியுடன் தகராறு செய்து பின் வாலிபர் தற்கொலை முடிவை தேடிக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்