"பல தடவை Call பண்ணியும் போன் எடுக்காத மனைவி.. அவசரமாக விமானத்தில் கிளம்பிய கணவர்.. வீட்டுக்கு வந்ததும் காத்திருந்த அதிர்ச்சி

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

காதல் திருமணம் செய்து கொண்ட பெண் மருத்துவர் எடுத்த முடிவு தொடர்பான செய்தி தற்போது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

"பல தடவை Call பண்ணியும் போன் எடுக்காத மனைவி.. அவசரமாக விமானத்தில் கிளம்பிய கணவர்.. வீட்டுக்கு வந்ததும் காத்திருந்த அதிர்ச்சி

Also Read | இத எல்லாம் எப்பவோ பண்ணிட்டாரு".. 8 வருசத்துக்கு முன்னாடியே சூர்யகுமார் அடிச்ச அடி.. வைரல் சம்பவம்!!

வேலூர் மாவட்டம், தொரப்பாடி பெரியல்லாபுரத்தைச் சேர்ந்தவர் செல்வ குமார். இவர் வேலூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பெயர் காயத்ரி. இவரும் அதே மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளார்.

தூத்துக்குடியை சேர்ந்த செல்வகுமார், கேரள மாநிலத்தை சேர்ந்த காயத்ரியை காதலித்து வந்ததாக தகவல் தெரிவிக்கின்றது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக இருவரும் அவர்களின் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இதனிடையே ஒரே மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வரும் கணவன் மனைவி ஆகியோர், வெவ்வேறு நேரங்களில் பணிக்கு சென்று வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதன் காரணமாக அடிக்கடி சேர்ந்து இருக்க முடியவில்லை என்றும் காயத்ரி மன வேதனையல் இருந்து வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

அப்படி ஒரு சூழலில், வேலை விஷயமாக சமீபத்தில் செல்வகுமார் டெல்லி சென்று இருந்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது மனைவி காயத்ரி வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார். செல்வகுமார் தனது மனைவி காயத்ரிக்கு செல்போன் மூலம் தொடர்ந்து தொடர்பு கொண்டு இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. ஆனால் நீண்ட நேரம் ஆகியும் போனை காயத்ரி எடுக்கவில்லை என தெரிகிறது.

இதனால் சந்தேகம் அடைந்த கணவர் செல்வகுமார், அவசர அவசரமாக டெல்லியில் இருந்து விமானம் மூலம் திரும்பி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவை பலமுறை தட்டியும் மனைவி காயத்ரி திறக்கவில்லை என தெரிகிறது. உரிமையாளர் வீட்டின் வழியாக தனது வீட்டுக்குள் நுழைந்து ஜன்னல் வழியாக செல்வகுமார் பார்த்த போது தான் காயத்ரி விபரீத முடிவு எடுத்து உயிரிழந்ததை அறிந்துள்ளார். இதனை அறிந்ததும் கணவர் செல்வகுமார் கதறித் துடித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட காயத்ரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக நடந்த முதற்கட்ட விசாரணையில், கணவன் மற்றும் மனைவியாக சேர்ந்து வீட்டில் இருக்கும் நேரம் மிகவும் குறைவு என்றும், இது பற்றி தனது கணவரிடமும் அடிக்கடி காயத்ரி பேசி வந்ததும் தெரியவந்துள்ளது.

காயத்ரி மறைவு குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான 4 ஆண்டுகளில் இளம்பெண் எடுத்த முடிவு தொடர்பான செய்தி தற்போது பலரையும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.

Also Read | "கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி இருந்த மனுஷன்".. கொஞ்ச நாளில் மாறுன கோடீஸ்வர இளைஞர் வாழ்க்கை..

FLIGHT, WIFE, ATTEND, PHONE CALL, HUSBAND, HOME

மற்ற செய்திகள்