நாகை விசிக பிரமுகர் இறப்பில் அவிழ்ந்த மர்மம்.. மாமியார் கைது.. மனைவியும் கைது.‌. நடந்தது என்ன?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நாகப்பட்டினம்: பாப்பாகோவில் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி கிளை செயலாளர் கொலையில் திடீர் திருப்பமாக மனைவி, மாமியார் சேர்ந்து கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.

நாகை விசிக பிரமுகர் இறப்பில் அவிழ்ந்த மர்மம்.. மாமியார் கைது.. மனைவியும் கைது.‌. நடந்தது என்ன?

நாகப்பட்டினம் மாவட்டம் பாப்பாகோவில் திடீர்நகர் தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார். ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு  அனுசுயா  என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர்.  இந்நிலையில், ஜனவரி 14-ம் தேதி பொங்கல் அன்று அதிகாலை ராஜ்குமார் உடல் கருகிய நிலையில் அவரது மாமியார் வீட்டின் முன்பு இறந்து கிடந்தார்.

இது குறித்து தகவலறிந்த நாகை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசுமருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி  வைத்தனர். பின்னர் கொலை வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் எந்த தகவலும் கிடைக்காததால் ராஜ்குமாரின் மனைவி மற்றும் மாமியாரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

wife and mother in law arrested for murdering husband in nagapattinam

மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் பொதுமக்கள் இணைந்து குற்றவாளியை பிடிக்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டமும் நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. விசாரணையில் ராஜ்குமாரின் மனைவி  அனுசுயாவை சந்தேகப்பட்டு துன்புறுத்தி வந்துள்ளார்.

விநாயகர் கண் திறந்ததாக பரவிய தகவல்.. ஆலயம் முன்பு குவிந்த பக்தர்கள்.. வைரல் வீடியோ

இதனால் ஆத்திரமடைந்து  தனது தாய் நிர்மலாவுடன் சேர்ந்து இரவு உணவில் அதிகளவில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்ததும், பின்னர்  ராஜ்குமார் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது வீட்டில் சமையலுக்காக வைத்திருந்த  மண்ணெண்ணையை  ஊற்றி தீ வைத்து எரித்து கொலை செய்ததும் தெரியவந்தது.

wife and mother in law arrested for murdering husband in nagapattinam

இதையடுத்து போலீசார் அனுசுயா, நிர்மலா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். வி.சி.க பிரமுகர் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் பல்வேறு நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், மனைவி மாமியார் கைது செய்யப்பட்டிருப்பது  நாகையில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மண்ணுக்கடியில் புதைச்சு வச்சிருந்த ஒரு பெட்டி.. பக்கத்துலயே இன்னொரு இடத்த தோண்டி பார்த்தப்போ.. 'ஷாக்' கொடுத்த குடும்பம்!

POLICE ARREST, WIFE-IN-LAW, NAGAPATTINAM, நாகப்பட்டினம்

மற்ற செய்திகள்