மனைவியுடன் தவறான உறவு.. தட்டிக்கேட்ட கணவன்.. கடைசியில் நடந்த கொடூரம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாகர்கோவில் அருகே மனைவியுடனான தவறான உறவை கண்டித்த ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள குஞ்சன்விளை பகுதியை சேர்ந்தவர் ரவுடி தங்க கிருஷ்ணன். வெல்டிங் பட்டறை நடத்தி வரும் இவர் மீது கொலை மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் கடந்த வாரம் மர்ம கும்பல் ஒன்று தங்க கிருஷ்ணனை அவரது வீட்டின் அருகிலேயே வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த சூழலில் இந்த கொலை சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், தங்க கிருஷ்ணன் மனைவிக்கும், பிரபு ஜெகதீஸ் என்பவருக்கும் தவறான உறவு இருந்துள்ளது. இதனை தங்க கிருஷ்ணன் தட்டிக்கேட்டதால் அவரை வெட்டிக் கொலை செய்ததும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் இந்த கொலை சம்பவத்தில் சம்பந்தப்பட்ட மற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக முக்கிய குற்றவாளியான பிரபு ஜெகதீசனை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மனைவியுடன் தவறான உறவில் இருந்தவரை தட்டிக்கேட்ட கணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்