சென்னையில் ஏரிகளை ஆக்கிரமித்து வீடுகளை கட்டியதால்தான் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளங்கள் எல்லாம் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் டி.நகர், வேளச்சேரி, பள்ளிக்கரணை, கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
முன்பு இரண்டு, மூன்று நாட்கள் தொடர்ந்து மழை பெய்தால்தான் சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். ஆனால் இப்போது ஒரு நாள் மழைக்கே சாலை முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதற்கு காரணம் ஏரிகளை ஆக்கிரமித்து வீடுகள், தொழிற்சாலைகள், சாலைகளை கட்டியதுதான் காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதில் வேளச்சேரி, கூடுவாஞ்சேரி, பல்லாவரம், சிட்லபாக்கம், பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழைக்கே வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இந்த பகுதியில் முன்பு பல ஏரிகள் இருந்துள்ளன. இவற்றை ஆக்கிரமித்து தற்போது பிளாட்டுகள் கட்டுப்பட்டுள்ளன.
இதனால் ஏரி ஆக்கிரமிப்பு குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ‘ஏரியின் வாழ்வுதனை பிளாட்டு கவ்வும், இறுதியில் ஏரியே வெல்லும்’ என நெட்டிசன் பதிவிட்டது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.
மற்ற செய்திகள்