அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது ஏன்?.. எப்படி?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அதிமுக-வில் சர்வ வல்லமை பொருந்திய தலைவராக எடப்பாடி பழனிசாமி உருவெடுத்துள்ளார்.

அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது ஏன்?.. எப்படி?

2021ம் ஆண்டு நடக்கவிருக்கின்ற சட்டமன்ற தேர்தலில், அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக தற்போதைய தமிழக முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போதே, தற்காலிக முதல்வராக இரண்டு முறை ஓ.பன்னீர்செல்வம் பதவி வகித்துள்ளார். எனினும், ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், ஓ.பன்னீர்செல்வத்தால் நீண்ட காலம் முதல்வர் பதவியை அலங்கரிக்க இயலவில்லை.

இதற்கு மிக முக்கிய காரணம், அப்போது அதிமுகவை சசிகலா தன்னுடைய முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது தான்.

காலத்தின் மாய விளையாட்டாக, சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறை செல்ல நேர்ந்ததால், அவரால் முதல்வராக முடியாமல் போனது. அத்தகைய இக்கட்டான சூழலில் தமிழகத்தை வழிநடத்த பதவிக்கு வந்தவர் தான், இன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

அவர் பதவியேற்ற நாள் முதல், கடுமையான அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், சாதுர்யமாக காய்களை நகர்த்தி, அதிமுக அரசின் ஸ்திர தன்மையை வெற்றிகரமாக நிலை நாட்டியுள்ளார்.

சசிகலாவின் ஆதரவில் முதல்வர் பதவிக்கு வந்த போது, அவரது அரசை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் அணியினர் சட்டமன்றத்தில் வாக்களித்தனர். பிறகு, இருவரும் கைக்கோர்க்கும் தருவாயில், சசிகலா தரப்பு நிர்வாகிகள் டி.டி.வி. தினகரன் தலைமையிலான அமமுகவை உருவாக்கினர்.

இத்தனை நெருக்கடிகளுக்கும் மத்தியில், தனது பதவியை இழக்காமலும், அதிமுக அரசின் ஆட்சிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்ததும், கட்சிக்குள் அவரது செல்வாக்கை வானளவு உயர்த்தியது.

இன்றைய சூழலில், கிட்டதட்ட பெரும்பான்மையான கட்சி நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், தொண்டர்கள் ஆகியோரின் ஆதரவைப் பெற்றுள்ள தலைவராக எடப்பாடி பழனிசாமி உருவெடுத்துள்ளார்.

இவை அனைத்தையும் கருத்தில் கொண்டே, அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 

மற்ற செய்திகள்