7.5% உள் ஒதுக்கீடு ‘அவசரமாக’ கொண்டு வர என்ன காரணம்..? முதல்வர் பழனிசாமி விளக்கம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அவசரமாக கொண்டுவந்தது குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.

7.5% உள் ஒதுக்கீடு ‘அவசரமாக’ கொண்டு வர என்ன காரணம்..? முதல்வர் பழனிசாமி விளக்கம்..!

கரூரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் பழனிசாமி, ‘வேளாண் சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இதைத்தான் விவசாய பிரதிநிதிகளுடன் பேசிய கலந்துரையாடலில் எடுத்துரைத்தேன். விவசாயிகள் வேளாண் சட்டங்களை வரவேற்கின்றனர். எங்கேயோ இருக்கும் ஏஜெண்டுகள், அவர்களுக்கு பயன்படும் நோக்கில் போராடி கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக இங்கே இருக்கும் அரசியல் கட்சிகளும் போராடி கொண்டிருக்கின்றனர். வரும் தேர்தலை மனதில் வைத்துதான் இதுபோன்ற சூழ்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்’ என முதல்வர் தெரிவித்தார்.

Why 7.5 internal allocation was brought urgently?, CM explain

இதனைத் தொடர்ந்து நீட் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, ‘திமுக ஆட்சியில் இருந்தபோதுதான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. அப்போது பதவிக்காக வாயை மூடி அமைதியாக இருந்தனர். நீட் தேர்வை கொண்டுவந்தது காங்கிரஸ். அதில் அங்கம் வகித்தது திமுக. நீட் தேர்வு வேண்டாம் என்பதற்காகத்தான் அதிமுக போராடியது. ஆனால் முடியவில்லை.

Why 7.5 internal allocation was brought urgently?, CM explain

அதனால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான் 7.5 சதவீத உள் ஒதுக்கீடை அவசரமாக கொண்டு வந்தோம். இதை யாரும் கேட்கவில்லை. நாங்களே கொண்டு வந்தோம். நான் அரசு பள்ளியில் படித்தவன். அதனால்தான் அரசு மாணவ, மாணவிகளுக்கு பயன்பட வேண்டும் என உள் ஒதுக்கீடு கொண்டு வந்தோம். நீட் தேர்வுக்கு முன்பு நுழைவுத்தேர்வில் 40 மாணவர்கள் மட்டும்தான் படித்தார்கள். நீட் தேர்வு வந்த பிறகும் 6 மாணவர்களுக்குதான் இடம் கிடைத்தது. அதனால் தற்போது கொண்டுவரப்பட்ட உள் ஒதுக்கீடு மூலம் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கிறார்கள்’ என முதல்வர் பழனிசாமி விளக்கமளித்தார்.

மற்ற செய்திகள்