சசிகலா விடுதலை எப்போது?... ஆர்டிஐ கேள்விக்கு அதிர்ச்சி 'பதிலளித்த' சிறை நிர்வாகம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா விரைவில் ரிலீஸ் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் சசிகலா விடுதலை குறித்து பெங்களூரை சேர்ந்த தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் டி.நரசிம்மூர்த்தி, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி கேட்டிருந்தார்.

அவரது இந்த கேள்விக்கு கர்நாடக அரசின் சிறைத்துறை பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை சூப்பிரண்டு லதா பதிலளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
சசிகலா (கைதி எண்: 9234) பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பொதுவாக ஒரு தண்டனை கைதியை விடுதலை செய்ய பல்வேறு அம்சங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. உதாரணத்திற்கு அபராத தொகை அடிப்படையில் கைதியை விடுதலை செய்யும் தேதி மாறுபடும். அதனால் சசிகலா விடுதலை குறித்து உங்களுக்கு எங்களால் சரியான தேதியை கொடுக்க முடியவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்து இருக்கிறார்.
TRENDING NEWS
மற்ற செய்திகள்
LATEST VIDEOS