‘கல்யாணத்துக்கு காசு இல்ல’!.. தவித்து நின்ற ‘மாற்றுத்திறனாளி பெண்’.. அடுத்தடுத்து நடந்த ‘அதிசயம்’.. ஊரடங்கில் நடந்த நெகிழ்ச்சி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்புதுச்சேரியில் வாட்ஸ் அப் மூலம் நிதி திரட்டி மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
புதுச்சேரி திப்புராயப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி லட்சுமி. இவர் தாய், தந்தை இழந்தவர். லட்சுமிக்கும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கேப்டன் என்பவருக்கும் திப்ராயப்பேட்டை கருமாரியம்மன் கோவிலில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. கொரோனா ஊரடங்கால் வருமானம் இல்லாததால், திருமணத்துக்கு பொருட்கள் வாங்க முடியாமல் லட்சுமி சிரமப்பட்டுள்ளார்.
இதனை அறிந்த சமூக ஆர்வலர்கள் சிலர் லட்சுமிக்கு உதவ முன்வந்தனர். ஆனால் தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் அவர்களால் நேரில் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் வாட்ஸ் அப்பில் ‘திருமண மொய்’ என்ற குழுவை உருவாக்கி, அதில் மாற்றுத்திறனாளி லட்சுமியின் நிலை குறித்து பதிவிட்டு பண உதவி கேட்டுள்ளனர். இதனை அடுத்து பலரும் அவரது வங்கிக்கணக்கு பணத்தை அனுப்பி வைத்துள்ளனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் ‘சக்ஷம்’ என்ற அமைப்பு லட்சுமிக்கு உதவ முன்வந்து, திருமணத்திற்கு தேவையான புடவை, சீர்வரிசை பொருட்களை வாங்கிக் கொடுத்துள்ளது. நேரு வீதியில் உள்ள தங்க நகை கடை ஒன்று தாலிக்கு பணம் ஏதும் வாங்காமல் லட்சுமியின் திருமண மொய்யாக வழங்கியுள்ளது. வாட்ஸ் அப் குழு மூலம் லட்சுமியின் வங்கி கணக்கில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான பணம் சேர்ந்தது. இதனை அடுத்து லட்சுமிக்கு சிறப்பாக திருமணம் நடந்து முடிந்தது. ஊரடங்கு சமயத்தில் பணமில்லாமல் தவித்த மாற்றுத்திறனாளி பெண்ணின் திருமணத்துக்கு உதவிய மனிதநேய செயல் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
மற்ற செய்திகள்