'தமிழகத்தில்' கொரோனா வைரஸின் நிலை என்ன?... 'இன்றைய நிலவரம்’... ‘அமைச்சர் அதிகாரப்பூர்வ தகவல்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பது குறித்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தகவல் வெளியிட்டுள்ளார்.

'தமிழகத்தில்' கொரோனா வைரஸின் நிலை என்ன?... 'இன்றைய நிலவரம்’... ‘அமைச்சர் அதிகாரப்பூர்வ தகவல்’!

அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், “தமிழகத்தில் இதுவரை 2,09,163 பேருக்கு கொரோனா வைரஸ் இருக்கிறதா என்று சோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 15,298 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.

தனிமைப்படுத்தலுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வார்டுகளில் 9,154 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. தற்போது கொரோனா அறிகுறிகள் இருப்பதாகக் கருதி 116 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 743 ரத்த மாதிரிகள் இதுவரை சோதனை செய்யப்பட்டுள்ளன. அதில் 608 மாதிரிகளில், கொரோனா இல்லை என்று முடிவுகள் வந்துள்ளன.

15 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 120 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா இருந்த ஒருவர், குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்,” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தமிழகத்தில் நேற்று வரை 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை மாநில அரசு உறுதி செய்திருந்த நிலையில், இன்று சென்னை போரூர், கீழ்கட்டளை, புரசைவாக்கத்தை சேர்ந்த மூவருக்கு புதிதாக கோவிட்-19 எனப்படும் கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்துள்ளார் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.

VIJAYABASKAR, CORONAVIRUS, TAMILNADU