'சென்னை கடற்கரை முழுசும் இப்ப வெள்ளை நுரை!' .. என்ன காரணம்? அதிர வைக்கும் ரிப்போர்ட்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் கடந்த 4 நாட்களாக மெரினா கடற்கரையில் இருந்து திருவான்மியூர் வரை பனிச்சருக்கு படிந்தது போல், வெள்ளை நுரைப் படலம் படர்ந்துள்ள காட்சிகளைத்தான் பலரும் நேரில் சென்று பார்த்துவிட்டு வருகின்றனர்.

'சென்னை கடற்கரை முழுசும் இப்ப வெள்ளை நுரை!' .. என்ன காரணம்? அதிர வைக்கும் ரிப்போர்ட்!

இந்த நுரை வழக்கத்துக்கு மாறானது என்றும், இதில் ஏதோ சுகாதாரக் கேடு உள்ளது என்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் ஒருபுறம் எச்சரித்துக்கொண்டிருக்க, இன்னொரு புறம் வெளிநாடுகளில் வசந்தகாலங்களில் படியும் பனிப்பொழிவு போல் நினைத்து மக்களும் குழந்தைகளும் மெரினாவை சூழ்ந்துள்ளனர்.

ஆனால் சுத்திகரிக்கப்படாத வீட்டுக் கழிவு நீர் கடலில் கலப்பதுதான் இதற்குக் காரணம் என்று கடற்கரை வள மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார். இயற்கையாகவே நன்னீர் கடல் நீருடன், அதாவது உப்புநீருடன் கலக்கும்போது இப்படியான நுரை உருவாகும். ஆனால் மீன்களின் இனப்பெருக்கத்தை பாதிக்கக் கூடிய இந்த அடர்த்தியான நுரை உருவாவதற்கான காரணம் வேதிமக் கழிவுகள் இந்த மழைநாளில் மழைநீருடன் சேர்ந்து கடல்நீருடன் கலப்பதுதான் என்றும், இதனால் கடலோர மக்களுக்கு தோல் அரிப்புகள் உள்ளிட்டவை ஏற்படுவதாகவும் மீனவர் நலச்சங்கத்தினர் கூறுகின்றனர்.

இது தொடர்பாக பேசிய மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள், கழிவுநீர் சுத்திகரிப்பு பணிகளை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளதாகவும், மழை குறைந்தால் நுரை குறைந்துவிடும் என்றும் உள்ளாட்சித் துறைக்கு இதுகுறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

RAIN, CHENNAI, BEACH, MARINA