Bigg boss 6 tamil : "ஒரு வேளை சத்துணவு சாப்பாடாச்சும் கிடைக்கும்னுதான் School-ல சேர்த்தாங்க!".. மைனா நந்தினி உருக்கம்.!.. கதையை தொடர விடுவார்களா ஹவுஸ்மேட்ஸ்..?
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.
அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு போட்டியாளராக தங்களுடைய கதையை சொல்லக்கூடிய நடைபெற்று வருகிறது. முந்தைய சீசன்களை போல் அல்லாமல், போட்டியாளர்கள் தங்களுடைய கதைகளை முழுமையாக செல்லக்கூடிய வாய்ப்பு இந்த முறை இல்லை. இந்தமுறை போட்டியாளர்கள் சொல்லக்கூடிய கதை சுவாரசியமாகவும் இன்ஸ்பிரேஷனாகவும் இல்லை என்று ஒருவர் கருதினால் உடனடியாக வந்து பஸ்ஸரை பிரஸ் பண்ணுவதன் மூலம், தங்களுடைய அதிருப்தியை தெரிவிக்கலாம். அப்படி 3 போட்டியாளர்கள் பஸ்ஸரை அழுத்திவிட்டால், கதை சொல்பவர் தங்களுடைய கதையை சொல்லிக் கொண்டிருக்கும்போதே நிறுத்திக் கொள்ள வேண்டும்.
அந்தவகையில் இதற்கு முன்பாக ஜனனி, ADK, அசீம் ஆகியோர் கதை சொல்லும்போது மற்றவர்கள் தடுத்துவிட்டனர். இதனை தொடர்ந்து தனலட்சுமி மற்றும் நிவாஷினி கதைகளை அனைவரும் தொடர்ந்து கேட்டனர். இந்த நிலையில்தான் பிக் பாஸ் வீட்டுக்குள் மைனா நந்தினி தன் கதை சொல்கிறார். பிக் பாஸ் 6 வது சீசனில் முதல் வைல்டு கார்டு எண்ட்ரி போட்டியாளராக உள்ளே வந்துள்ள மைனா நந்தினி, முன்னதாக விஜய் டிவி சீரியல்களில் நடித்து வந்தவர்.
தொடர்ந்து விஜய் டிவி நகைச்சுவை ரியாலிட்டி ஷோக்களின் நடுவர்களில் ஒருவராக பங்கேற்றிருந்தார். அண்மையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் நடித்த ‘விக்ரம்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மனைவியாக நடித்திருந்தார் மைனா நந்தினி. தொடர்ந்து பல திரைப்படங்களிலும் நடித்து வரும் மைனா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய கதையை சொல்கிறார்.
அதில், “என்னை பள்ளியில் சேர்த்ததே சத்துணவு சாப்பாடு ஒருவேளை கிடைக்கும் என்றுதான். நான் பிக்பாஸ்க்கு தான் வரப்போகிறேன் என நான் சற்றும் எதிர்பார்க்கவே இல்லை. அந்த மாதிரிதான் என்னுடைய தொழில்வாழ்க்கையை நான் தொடங்கினேன்..” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே 2 பேர் பஸ்ஸர் அழுத்திவிட்டனர். அப்போது மைனா , “இரண்டு பேர் பஸ்ஸரை அழுத்தி விட்டார்கள்.. நான் கதையை தொடரவேண்டுமா? மூன்றாவது ஆள் அடிக்கிறாரா?” என்று கேட்கிறார்.
மைனாவை கதை சொல்வதற்கு ஹவுஸ் மேட்ஸ் தொடர விடுவார்களா என்பதை எபிசோடில்தான் பார்க்க முடியும். பிக்பாஸை பொருத்தவரை என்னதான் போட்டியாளர்கள் கதை சொல்லும்போது தடுக்கப் படுவதால், தங்கள் கதையை சொல்ல முடியாமல் போனாலும் கூட, மற்றவர்கள் அவருடைய கதையை கன்ஃபெஷன் அறையில் இருந்து வெளியே வந்த பிறகு கேட்டு தெரிந்து கொள்கின்றனர்.
மற்ற செய்திகள்