'மோசமான வரலாற்றை நோக்கி சென்னை'... 'எச்சரிக்கும் நிபுணர்கள்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் கடந்த பல மாதங்களாக மழை பெய்யாததால், 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வறட்சி நிலவுகிறது.

'மோசமான வரலாற்றை நோக்கி சென்னை'... 'எச்சரிக்கும் நிபுணர்கள்'!

சென்னையில் கடந்த ஆண்டில் இறுதியாக மழை பெய்த நாள் தொடங்கி, இந்த ஆண்டில் தற்போது வரை, மழையே பெய்யாத நாட்களின் எண்ணிக்கை 191 ஆக உள்ளது. இந்நிலையில் இன்னும் 2, 3 நாட்கள் இதே நிலைமை நீடித்தால், மழையே பெய்யாத நாட்களின் எண்ணிக்கையில், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத மோசமான வரலாற்றை சென்னை மாநகரம் படைக்கும்.

தொடர்ந்து மழை பெய்யாமல் இருக்கும் பட்சத்தில் தண்ணீர் தட்டுப்பாடும் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். வெப்பச்சலனம் காரணமாக இருநாட்கள் மழைபெய்யும் என வானிலை மையம் தெரிவித்தநிலையில், மழை பெய்யவில்லை. கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழையின்போதுதான் சென்னையில் மழை பெய்தது. 2015-ம் ஆண்டில் தொடர்ந்து 193 நாட்கள், சென்னையில் மழை பெய்யாமல் இருந்ததே மோசமான வரலாறாக இருந்தது.

இந்நிலையில், ஜூன் 20-ம் தேதிக்குப் பிறகு மழையை எதிர்பார்க்கலாம் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். ஜூன் மற்றும் ஜூலையில், சென்னைக்கு மழை கிடைத்தாலும் கூட அது தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்த்து வைக்கக் கூடிய அளவுக்கு இருக்காது. நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயரும் வாய்ப்புகளையும் எதிர்பார்க்க முடியாது. ஆனால் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் அளவிற்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என அவர் கூறியுள்ளார்.

CHENNAI, HEATWAVES, RAIN