‘அடுத்த 2 நாட்கள் பத்திரமா இருந்துக்கோங்க’... 'வானிலை மையம் அறிவிப்பு'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில்  வெப்பச் சலனம் காரணமாக, அடுத்த இரண்டு நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

‘அடுத்த 2 நாட்கள் பத்திரமா இருந்துக்கோங்க’... 'வானிலை மையம் அறிவிப்பு'!

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்கு பருவகாற்று காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார். மேலும் நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் கனமழையும், மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில், மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது முகநூல் பக்கத்தில், ‘சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நிச்சயம் மழை பெய்யும். மேலும், காவிரி நீர்பிடிப்புப் பகுதிகள், கேரளா, தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இந்த வாரம் மழைக்கு வாய்ப்பு உள்ளது’ என்று தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

RAIN, FORECAST, WEATHERMEN, CHENNAI