தண்ணீர் கேன்கள், தண்ணீர் பாட்டில்கள் ஆகியவற்றின் விலை வருகிற புத்தாண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் விலை உயர உள்ளது.
தமிழகத்தில் தண்ணீர் பாட்டில் முதல் 20 லிட்டர் தண்ணீர் கேன் விலை வரையில் அனைத்தும் விலை உயர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ப்ளாஸ்டிக் பாட்டில்கள், கேன்கள் ஆகியவற்றைத் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் விலை அதிகரித்ததன் காரணமாகவும், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, பணியாளர்கள் ஊதியம் ஆகியன அதிகரித்ததன் காரணமாகவும் தமிழ்நாடு முழுவதும் இந்த விலை உயர்வு.
அதுவும் வருகிற ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டு முதலே இந்த விலை உயர்வு அமல் ஆக உள்ளது. தமிழகத்தில் மட்டும் சுமார் 1,700 குடிரீர் உற்பத்தி ஆலைகள் செயல்படுகின்றன. இதில் 400-க்கும் அதிகமான குடிநீர் ஆலைகள் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளிலேயே இருக்கின்றன.
சென்னையில் தான் பெரும்பாலானோர் தண்ணீர் கேன் வாங்கிப் பயன்படுத்துகின்றனர். சென்னையில் மட்டும் நாள் ஒன்றுக்கு 4 லட்சம் கேன் குடிநீர் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதாம். தமிழ்நாடு முழுவதுமே சேர்த்து 6 லட்சம் குடிநீர் கேன்கள் நாள் ஒன்றுக்கு விற்பனை ஆகின்றன. மேற்குறிப்பிட்ட காரணங்களால் குடிநீர் கேன்கள் விலை உயர்த்தப்படுகிறது.
தண்ணீர் கேன்கள் 30 ரூபாய் முதல் 35 ரூபாய் வரையில் என்ற கணக்கில் இதுவரையில் விற்கப்பட்டு வந்தது. இனி ஜனவரி 1-ம் தேதி முதல் 35 ரூபாய் முதல் 40 ரூபாய் வரையில் விற்பனை ஆகும் எனக் கூறப்படுகிறது. இதேபோல், 500 மிலி மற்றும் 1 லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரையில் விலை உயர்த்தப்படுகிறது.
இதுகுறித்த அறிவிப்பை தமிழ்நாடு கேன் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் அனந்த நாராயணன் வெளியிட்டார். இந்த விலை நிலவரம் சென்னை மட்டுமல்லாது அனைத்து மாவட்டங்களிலும் வருகிற புத்தாண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் உயரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்