‘டான்ஸ் ஆடலாம், கட்டிப் பிடிக்கலாம்’.. அசத்தும் அரசு பள்ளி ஆசிரியைக்கு குவியும் பாராட்டுக்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வித்தியாசமான முறையில் மாணவர்களை உற்சாகப்படுத்தி பாடம் எடுக்கும் அரசு பள்ளி ஆசிரியைக்கு பாரட்டுக்கள் குவிந்து வருகின்றன.
புதுச்சேரி நோனாங்குப்பத்தில் இருக்கும் அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் சுபாஷினி. இவர் காலையில் வகுப்பறைக்கு வரும் குழந்தைகளை வரவேற்க வித்தியாசமான முறையை கையாண்டு வருகிறார். இதனால் சுபாஷினி டீச்சர் வகுப்புக்கு வந்தாலே குழந்தைகள் உற்சாகமாகி விடுவதாக கூறுகின்றனர்.
வகுப்பின் சுவற்றில் நடனம் ஆடுதல், கட்டிப்பிடித்தல் போன்ற படங்களை ஆசிரியை சுபாஷினி ஒட்டி வைத்துள்ளார். இதில் மாணவ, மாணவிகள் தங்களுக்கு பிடித்த ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய சொல்கிறார். பள்ளிக் குழந்தைகள் தங்களுக்கு பிடித்த ஒன்றின் மீது கை வைத்தால், அதில் உள்ளது போன்று குழந்தைகளுடன் சேர்ந்து செய்து அசத்துகிறார்.
உதராணமாக நடனம் ஆடும் படைத்தை தொட்டால் குழந்தைகளுடன் சேர்ந்து நடனமாடி வகுப்பறைக்கு வரவேற்கிறார். இப்படி ஒவ்வொரு குழந்தைகளையும் பொறுமையாக வகுப்பறைக்குள் சுபாஷினி வரேவேற்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதோடு, ஆசிரியை சுபாஷினிக்கு பாரட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.