‘காவேரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தந்தை, மகன்’.. தீயணைப்பு வீரர் எடுத்த முடிவு..! நெஞ்சை பதபதைக்கும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்காவேரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தந்தை, மகனை போராடி மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு மக்கள் பலர் காவேரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது ஈரோடு மாவட்டம் பழையபாளையம் பகுதியை சேர்ந்த திருமூர்த்தி என்பவரும், அவரது 9 வயது மகன் கிருஷ்ணனும் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த தீயணைப்புப்படை வீரர் மோகன் என்பவர், ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த தங்கள் குழுவினருக்கு தகவல் கொடுத்துவிட்டு இருவரையும் மீட்க உடனே ஆற்றில் குதித்துள்ளனர். இதனை அடுத்து சில நிமிடங்களில் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக கயிறு கட்டி ஆற்றுக்குள் இறங்கி தந்தையையும், மகனையும் மீட்டுள்ளனர்.
ஆற்றில் மூழ்கியதில் மகன் கிருஷ்ணன் மயக்க நிலையில் இருந்துள்ளார். இதனால் தீயணைப்புப்படை வீரர்கள் உடனடியாக முதலுதவி செய்ய ஆரம்பித்துள்ளனர். பின்னர் தீயணைப்பு வீரர்களுள் ஒருவர் சிறுவனின் வாயில் செயற்கை சூவாசத்தை செலுத்தி முயற்சி செய்துள்ளார். சிறிது நேரத்தில் சிறுவன் கண் விழித்துள்ளார். இதனைத் தொடர்ந்து உடனடியாக இருவரையும் தீயணைப்புத் துறையினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். துரிதமாக செயல்பட்டு இரு உயிர்களை காப்பற்றிய தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டுக்கள் குவித்து வருகின்றன.