"வாழ்நாள் பூரா எங்களுக்காகவே வாழ்ந்த சாமிங்க அவரு"... 'ஐந்து' ரூபாய் டாக்டரின் மறைவால்,,.. கலங்கி நிற்கும் வடசென்னை 'மக்கள்'!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வடசென்னையின் எருக்கஞ்சேரி பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக விளிம்பு நிலைக்கு இலவசமாகவும், ஐந்து ரூபாய் கட்டணத்துக்கும் சிகிச்சையளித்து வந்த மருத்துவர் திருவேங்கடம் மாரடைப்பால் உயிரிழந்தார்.
மருத்துவர் திருவேங்கடம் ஆரம்ப கால கட்டத்தில் தனது மருத்துவ பணியின் போது, இரண்டு ரூபாய் கட்டணமாக பெற்று வந்த நிலையில், அதன் பிறகு 5 ரூபாய் கட்டணமாக பெற்றுக் கொண்டார். அதனை தாண்டி ஒரு ரூபாய் கூட அதிகமாக இதுவரை அவர் கட்டணமாக பெற்றதில்லை. காலையில் இருந்து மதியம் வரை எருக்கஞ்சேரி பகுதியிலும், மாலை முதல் இரவு வரை வியாசர்பாடி பகுதியிலும் ஏழை மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தார். பல புற்று நோயாளிகளுக்கு எந்தவித கட்டணமும் இன்றி சிகிச்சை முறைகளை அறிவுறுத்தி குணமடைய செய்ததில் மிக முக்கிய பங்கு மருத்துவர் திருவேங்கடத்திற்கு உண்டு.
இவரது மறைவு செய்தி வடசென்னை பகுதி மக்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நாற்பது ஆண்டு காலம் ஏழைகளிடம் ஐந்து ரூபாய்க்கு அதிகமாக கட்டணம் வாங்காமல் சேவையாற்றி வந்த மருத்துவர் திருவேங்கடத்தின் மனைவி ஒய்வு பெற்ற ரயில்வே ஊழியர் ஆவர். இவர்களது மகள் மற்றும் மகன் ஆகியோர் மருத்துவ துறையில் உள்ளனர்.
குடும்பத்தினர் ஒத்துழைப்பு இருந்ததால் தான் தன்னால் ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவ சேவை செய்ய முடிந்தது என கூறிய மருத்துவர் திருவேங்கடத்திற்கு ஏழை, எளிய மக்களுக்காக குறைந்த செலவில் தரமான மருத்துவ சேவை அளிக்கக்கூடிய மருத்துவமனை ஒன்றை கட்டுவதே கனவாக இருந்தது என்கின்றனர் அவரது உறவினர்கள்.
மற்ற செய்திகள்