"இது தாங்க உண்மையா நடந்துச்சு..." 'ஜாமீன்' கோரி 'ஹேம்நாத்' மனு... 'அதில்' சொல்லப்பட்ட பரபரப்பு 'விஷயம்'!!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கடந்த டிசம்பர் மாதம் 9 ஆம் தேதியன்று, சென்னையிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வைத்து சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட சம்பவம், கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

"இது தாங்க உண்மையா நடந்துச்சு..." 'ஜாமீன்' கோரி 'ஹேம்நாத்' மனு... 'அதில்' சொல்லப்பட்ட பரபரப்பு 'விஷயம்'!!!

இவரது தற்கொலைக்கான காரணம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், சித்ராவுக்கு அவரது காதலர் ஹேம்நாத்துடன் ஏற்கனவே பதிவு திருமணம் நடைபெற்றது தெரிய வந்தது. இந்த வழக்கு ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில் இது தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக ஹேம்நாத்தை போலீசார் கைது செய்தனர்.

ஆர்.டி.ஓ விசாரணை முடிவடைந்துள்ளதையடுத்து, சித்ரா தற்கொலை தொடர்பாக முழுமையான காரணங்கள் எதுவும் தெரியாமல் இருந்து வந்தது. இந்நிலையில், சித்ராவின் தற்கொலை வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றி சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று உத்தரவிட்டிருந்தார்.

இதனிடையே, நடிகர் சித்ரா தற்கொலை வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கக் கூடாது எனக் கூறி, நான் சித்ரா மீது சந்தேகம் கொண்டதால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு பொய்யானது என தனது மனுவில் ஹேம்நாத் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் தாங்கள் திருமணம் செய்து கொண்டதாக மனுவில் குறிப்பிட்ட ஹேம்நாத், தன்னுடனும் தனது குடும்பத்தினரிடமும் சித்ரா அன்போடு பழகியது சித்ராவின் தாய்க்கு பிடிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். தனக்கும், சித்ராவுக்கு இடையில் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை என குறிப்பிட்ட ஹேம்நாத், எந்த குற்றமும் செய்யாததால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.

சித்ரா தற்கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய காவல் துறைக்கும் நீதிபதி பாரதிதாசன் உத்தரவிட்டுள்ளார். பின், மனுவுக்கு ஜனவரி 18 ஆம் தேதிக்குள் பதிலளிக்கும் படி, காவல்துறையிடம் அறிவுறுத்தியுள்ளார்.

மற்ற செய்திகள்