என் பெஸ்ட் ஃப்ரண்ட்னு நினைச்சு தானே எல்லாம் சொன்னேன்...! 'சொல்லிட்டு போன உடனே 4 பேர வச்சு அரங்கேற்றிய மெகா ப்ளான்...' - நட்புக்கு செய்த துரோகம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கணேஷ் நகரை சேர்ந்தவர் ஜெயகிருபா. கடந்த 10-ம் தேதி அன்று அவரது வீட்டிற்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பது போல் 4 பேர் வந்துள்ளனர். வீட்டில் தனியாக இருந்த ஜெபகிருபாவிடம் கத்தியை காட்டி மிரட்டி, கை, கால்களை கட்டிப்போட்ட அந்த கும்பல் கழுத்தில் அணிந்திருந்த நகைகள் மற்றும் பீரோவில் இருந்த நகைகள் என மொத்தம் 35 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

என் பெஸ்ட் ஃப்ரண்ட்னு நினைச்சு தானே எல்லாம் சொன்னேன்...! 'சொல்லிட்டு போன உடனே 4 பேர வச்சு அரங்கேற்றிய மெகா ப்ளான்...' - நட்புக்கு செய்த துரோகம்...!

இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து உடனடியாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து, அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர். அதில் நேரு நகர் பகுதியை சேர்ந்த கணேஷ்குமார் என்பவர் கொள்ளை நடந்த இடத்தை சுற்றி  சந்தேகப்படும்படியாக சுற்றிதிரிந்ததைக் கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து விசாரணை தொடங்கியது. அவர் மூலமாக அருண்பாண்டியன் என்ற இளைஞனை கைது செய்து விசாரித்த போது இந்த கொள்ளைச்சம்பவத்துக்கு தலைவராக ஒரு பெண் ஒருவர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஜெயகிருபாவின் வீட்டின் அருகே வசிக்கும் அவரது தோழியான முத்துச்செல்வி என்பவர் இந்த கொள்ளை சம்பவத்திற்கு தலைவராக செயல்பட்டது தெரிய வந்தது. பணத்தேவையால் முத்துச்செல்வி தவித்துக் கொண்டிருந்தபோது, தான் அடகு வைத்த நகைகளை மீட்டு வந்ததை ஜெயகிருபா அவரிடம் பெருமையாக கூறியுள்ளார்.

இதனையடுத்து அந்த நகைகளை எப்படியாவது கொள்ளையடித்து தன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்ற விபரீத எண்ணம் முத்துலட்சுமிக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தன்னுடைய நண்பர்களான அருண்பாண்டியன், கணேஷ்குமார், சோலைச்சாமி, ஹரிஹரன் ஆகியோரை  கொள்ளைத் திட்டத்திற்கு பயன்படுத்தி உள்ளார்.

இதனை தொடர்ந்து முத்துச்செல்வியையும், கன்னிக் கொள்ளையர்களான 4 இளைஞர்களையும் காவல் துறையினர் கைது செய்தனர். கொள்ளையடித்த நகைகளையும், கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்திய ஒரு காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மற்ற செய்திகள்