'என்னத்த செஞ்சிட போறோம்?'.. நெகிழும் டிராஃபிக் காவலர்.. குவியும் பாராட்டுக்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மனிதர் நோக மனிதர் காணுவதை விரும்பாத மனிதர்களின் மனிதத்துவம் எப்போதுமே மனித உள்ளத்தை விட ஒருபடி மேலேதான் என்பதை டிராஃபிக் காவலர் ஒருவர் நிரூபித்துள்ள சம்பவம் நெகிழ வைத்துள்ளது.

'என்னத்த செஞ்சிட போறோம்?'.. நெகிழும் டிராஃபிக் காவலர்.. குவியும் பாராட்டுக்கள்!

விருதுநகர் போக்குவரத்துக் காவலர் ரங்கநாதன் என்பவர் அப்ப்குதியின் சாலையில் குப்பைக் கிடங்குகளுக்கு மத்தியில் வாழ்ந்துகொண்டிருந்த முதியவரை எல்லார் மாதிரியுமான ஒரு நபராக மாற்ற வேண்டும் என்கிற எண்ணத்தில் அவரை அணுகியிருக்கிறார்.

இதற்கென சற்றே நினைவுகளற்று இருந்த அந்த முதியவரை , ரங்கநாதன் சலூனுக்கு அழைத்துச் சென்று முகத்தாடியை ஷவரம் செய்ய வைத்து, அவருக்கு புத்தாடைகள் வாங்கிக் கொடுத்து புதிய மனிதராக மாற்றி அழகுபார்த்துள்ளார். எப்போதும் அப்பகுதியின் ஆதரவற்றவர்களுக்கு சாப்பாட்டுக்கு பணம் கொடுத்துவிட்டுச் சென்றால்தான் தனக்கு நிம்மதி எனக்கூறும் ரங்கநாதன், தினமும் செல்லும் வழியில் இருக்கும் இந்த பெரியவருக்கு இதையெல்லாம் செய்துவிடத் தோன்றியதாகக் குறிப்பிடுகிறார்.

மேலும் அப்பகுதியில் உள்ள ஆதரவற்ற பலருக்கும் தன்னைத் தெரியும் என்பதால் உரிமையோடு வந்து பணம் கேட்பார்கள் என்றும், பார்வை மாற்றுத் திறனாளிகள் பலரும் தன் குரல் கேட்டால் அருகில் வந்து நெகிழ்ந்துகொள்வார்கள் என்றும் கூறும் ரங்கநாதன் ‘இவர்களுக்கு செய்யாமல் வேறு யாருக்கு என்னத்தைச் செய்துவிடப் போகிறோம், இதில்தான் நிம்மதி உள்ளது’ என கூறியுள்ளார் விருது கொடுக்கப்பட வேண்டிய இந்த விருதுநகர் காவலர்.

TRAFFICPC, VIRUDHUNAGAR