கோர்ட்டுக்கு போற வழியில.. தப்பித்து போன நபர்.. மீண்டும் நீதிமன்றத்தில் சரண் அடைந்த வினோத சம்பவம்!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அவ்வப்போது இணையத்தில் நாம் அதிக நேரத்தை உலவிடும் போது நம்மைச் சுற்றி நடக்கும் பல்வேறு விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ள முடியும். அப்படிப்பட்ட ஒரு விஷயம் குறித்த செய்தி தான், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

கோர்ட்டுக்கு போற வழியில.. தப்பித்து போன நபர்.. மீண்டும் நீதிமன்றத்தில் சரண் அடைந்த வினோத சம்பவம்!!

Also Read | "நீட் தேர்வை ஒழிக்கணும், அது வரைக்கும் ஓயமாட்டேன்".. முதல்வர் மு.க. ஸ்டாலின் லட்சியம் இது தான்.. Exclusive!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கல்லூரணி என்னும் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கும் வீடு கட்டுவது குறித்து முன் தகராறு இருந்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

அப்படி இருக்கையில் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் வசிக்கும் தங்கபாண்டி என்பவர், கிருஷ்ணமூர்த்திக்கு ஆதரவாக வேல்முருகன் வீட்டின் முன்பிருந்த தேக்கு மரத்தை வெட்டியதாகவும் அதைத் தட்டி கேட்ட வேல்முருகன் மனைவியையும் அரிவாளால் வெட்ட முயன்றதாகவும் கூறப்படுகிறது.

தப்பித்த கைதி

இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வேல்முருகன் மனைவி அளித்த புகாரின் பெயரில் போலீசார் தங்கபாண்டியை கைது செய்து அழைத்துச் சென்றனர். தொடர்ந்து தங்கபாண்டியை அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் ம.ரெட்டியப்பட்டி போலீசார் அழைத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

அப்போது நீதிமன்றத்திற்கு செல்லும் வழியில் தனியார் உணவகத்திலும் போலீசார் சாப்பிட்டுவிட்டு கிளம்ப முடிவெடுத்துள்ளனர். அந்த சமயத்தில் திடீரென தங்கபாண்டி தப்பி ஓடியதாகவும் சொல்லப்படுகிறது. இதனையடுத்து சுமார் 2 மணி நேரம் தங்கபாண்டியை அப்பகுதி முழுவதும் போலீசார் தேடி உள்ளனர்.

நீதிமன்றத்தில் சரண்

இந்த நிலையில் தான் போலீசாரிடம் இருந்து தப்பிய தங்க பாண்டி நேராக அருப்புக்கோட்டை நீதிமன்றத்திலும் சரணடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் நீதிமன்றத்தில் சரணடைந்த விஷயம், சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு போலீசாருக்கு தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் சென்ற போலீசார், மற்ற செயல்களை மேற்கொண்டுள்ளனர்.

நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல போலீசார் அழைத்து சென்ற கைதி, திடீரென தப்பித்து சென்றது போலீசாரை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருந்தது. ஆனால், தப்பி ஓடிய தங்க பாண்டி, அதே வேளையில் நீதிமன்றத்திலும் சரணடைந்தது பலரையும் குழப்பம் அடைய வைத்திருந்தது.

நடந்தது என்ன?

அப்படி இருக்கையில் தங்க பாண்டிக்காக ஆஜரான வழக்கறிஞர் இது பற்றி பேசுகையில் கொலை மிரட்டல் காரணமாக கைது செய்ததால் தன்னை சிறையில் அடைத்து விடுவார்கள் என பயந்து  வழக்கறிஞரான தன்னைத் தேடி வந்து ஜாமினில் எடுத்து விடுங்கள் என கூறியதாகவும், அப்போது தான் நீதிமன்றத்தில் தங்க பாண்டியை தான் சரணடைய சொன்னதாகவும் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றம் செல்லும் வழியில் தப்பித்து சென்ற கைதி, பின்னர் சில மணி நேரம் கழித்து நீதிமன்றத்தில் சரண் அடைந்ததும் அதற்கான காரணமும் தற்போது அதிகம் வைரல் ஆகி வருகிறது.

Also Read | "233 ஆவது தோல்வி".. வாக்களிச்ச 6 பேருக்கும் நன்றி, மகிழ்ச்சியா இருக்கு.. தேர்தல் மன்னன் பத்மராஜனின் அதிரடி ஸ்பீச்!!

VIRUDHUNAGAR, PRISONER, ESCAPE, COURT

மற்ற செய்திகள்