"10 குழந்தை பெத்துக்கணும்ன்னு ஆசை" 😅.. வைரல் Couple சதீஷ் - தீபாவின் ஜாலி பதில்ஸ்.. Exclusive!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பொதுவாக இன்றைய காலகட்டத்தில் நாம் இணையத்தை திறந்தாலே ஏராளமான வைரல் வீடியோக்களை பார்க்க முடியும்.

"10 குழந்தை பெத்துக்கணும்ன்னு ஆசை" 😅.. வைரல் Couple சதீஷ் - தீபாவின் ஜாலி பதில்ஸ்.. Exclusive!!

அதே போல, ஏராளமானோர் தங்களின் திறமையை வெளிப்படுத்தவும் இன்ஸ்டாகிராம், பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைத்தள பக்கங்களையும் பயன்படுத்தி வருகின்றனர். தங்களின் நடிப்பு திறமையோ அல்லது தங்களுக்குள் இருக்கும் நடனம் உள்ளிட்ட ஏதாவது ஒரு திறமையோ இதில் வீடியோக்களாக பதிவிட்டு மக்கள் மத்தியில் வைரல் ஆகி தங்களுக்கான ஒரு பெயரை எடுக்கவும் செய்வார்கள்.

இது ஒரு புறம் இருக்க தினசரி வீட்டில் நடக்கும் விஷயங்களை அதே பாணியில் எமோஷனல் ஆகவோ அல்லது காமெடியாகவோ கலந்து ஏராளமான நிஜ தம்பதிகள் வீடியோக்களை உருவாக்கி அதனை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கத்திலும் வெளியிட்டு வருகின்றனர்.

சதீஷ் - தீபா

அந்த வகையில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தம்பதிகளில் ஒருவர் சதீஷ் மற்றும் தீபா ஆகியோர். இவர்கள் இருவரும் தங்கள் குழந்தைகளுடன் இணைந்தோ அல்லது தனியாகவோ தங்கள் வீட்டில் நடக்கும் விஷயங்களை அடிப்படையாக வைத்து மிகவும் கலகலப்பான வீடியோக்களை உருவாக்கி வெளியிட்டு வருகின்றனர்.

Viral Couple Sathish and Deepa fun interview exclusive

முழுக்க முழுக்க வேடிக்கையாகவும் பார்ப்பதற்கு திருமணமானவர்கள் கூட தொடர்புபடுத்திக் கொள்ளும் அளவுக்கு சதீஷ் மற்றும் தீபா ஆகியோரின் வீடியோக்கள் இருப்பதால் இவர்களுக்கு என பிரத்யேக ரசிகர்கள் கூட்டமும் உள்ளது.

இந்த நிலையில், Behindwoods நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் சதீஷ் மற்றும் தீபா ஆகியோர் சமீபத்தில் கலந்து கொண்டனர். தங்களது குழந்தைகளுடன் இந்த நிகழ்ச்சியில் அவர்கள் கலந்து கொண்ட சூழலில், தங்களது வாழ்வில் உள்ள பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களையும் இந்த நிகழ்ச்சியில் அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.

Property Round

மேலும் பள்ளிக்காலம் முதல் சதீஷு மற்றும் தீபா ஆகிய இருவரும் காதலித்து தற்போது திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருவதை பற்றியும் பல்வேறு தகவல்களை அவர்கள் பகிர்ந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சிக்கு நடுவே அவர்களுக்கு Property Round என்ற ஒன்று கொடுக்கப்பட்டது. அதன்படி, சதீஷ் மற்றும் தீபா ஆகிய இருவர் முன்னிலையில் சில பொருட்கள் இருக்க,அதை எடுத்து கொண்டு அதை பற்றி பேச வேண்டும் என்பது தான் அது.

Viral Couple Sathish and Deepa fun interview exclusive

10 குழந்தை பெத்துக்கணும்

அந்த வகையில், Diary Milk சாக்லேட், கரண்டி உள்ளிட்ட பல பொருட்கள் வைக்கப்பட அதனை எடுத்துக் கொண்டு தங்கள் வாழ்வில் நடந்த விஷயங்களையும் ஒப்பிட்டு பேசவும் செய்கின்றனர். அப்போது குழந்தைகள் விளையாடும் பொருள் ஒன்றை எடுத்த சதீஷ், "அவளுக்கு வந்து குழந்தைங்க நிறைய பெத்துக்கணும்ன்னு ஆசை. உண்மையிலேயே.. அவளை வேணும்ன்னா கேளுங்க. 10 குழந்தைங்க பெத்துக்கணும்ன்னு ஆசை அவளுக்கு" என தெரிவித்தார். அந்த சமயத்தில் தொகுப்பாளர் நிக்கி ஜாலியாக சில விஷயங்களை பற்றியும் பேசி இருந்தார்.

SATHISH DEEPA

மற்ற செய்திகள்