நடிகர்கள் விமல், ’பரோட்டா’ சூரி மீது ’போலீசார்’ வழக்கு பதிவு - என்ன நடந்தது?
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகர்கள் விமல், சூரி மீது கொடைக்கானம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கொடைக்கானலில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு சென்று மீன் பிடித்த புகைப்படங்களை வெளியிட்டதை அடுத்து, அதன் அடிப்படையில் கடந்த 18-ஆம் தேதி நடிகர்கள் விமல், சூரி மீது வனத்துறையில் வழக்குப்பதிவு செய்து தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து, அவர்கள் மீது, ஊரடங்கை மீறி தடையை மீறி இ-பாஸ் இல்லாமல் வந்தது, நோய் பரவும் நேரத்தில் பாதுகாப்பில்லாமல் நடந்துகொண்டது உள்ளிட்டவற்றுக்காக பிரிவு 270ன் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். இவர்களுக்கு உதவிய போலீஸார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
TRENDING NEWS
மற்ற செய்திகள்
LATEST VIDEOS