அவங்க மட்டும் இல்லன்னா என்ன ஆகியிருக்கும்??.. போராடிய மாற்றுத் திறனாளி.. ஹீரோவாக மாறிய ஆட்டோ ஓட்டுனர்கள்
முகப்பு > செய்திகள் > தமிழகம்மாற்றுத்திறனாளி ஒருவருக்கு நடைபெறவிருந்த வீபரீதத்தில் இருந்து, அவரை ஆட்டோ டிரைவர்கள் காப்பாற்றியது தொடர்பான வீடியோக்கள், அதிகம் வைரலாகி வருகிறது.
விழுப்புரம் ரெயில் நிலையம் அருகே, உழவர் சந்தை பகுதிக்கு அருகில், ஆட்டோ ஸ்டாண்டு ஒன்று உள்ளது. இதன் அருகே, அழுக்கு சட்டை அணிந்த மாற்றுத்திறனாளி ஒருவர் படுத்து கிடந்ததாக கூறப்படுகிறது.
அப்போது, அவரிடம் சுமார் 8,500 ரூபாய் இருந்ததாகவும் தகவல்கள் கூறுகிறது. இந்நிலையில், அந்த பணத்தினை வடமாநில இளைஞர் ஒருவர், பறித்துச் செல்ல முற்பட்டதாக கூறப்படுகிறது.
நீங்க ரொம்ப 'ஸ்வீட்' பாட்டி.. 86 வயதில் அடித்த லாட்டரி.. குஷியில் செஞ்ச சிறப்பான விஷயம்
தாமதிக்காத ஆட்டோ ஓட்டுநர்கள்
மாற்றுத் திறனாளி ஒருவரிடம் இருந்து இளைஞர் ஒருவர், பணத்தை அபகரித்துக் கொண்டு, தப்பிச் செல்லும் நிகழ்வினை அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள், பிரகாஷ், மகேந்திரன், சுரேஷ், ராஜசேகர் ஆகியோர் கவனித்துள்ளனர். இதனைக் கண்டதும் ஒரு நொடி கூட தாமதிக்காமல், நான்கு பேரும், அந்த வடமாநில இளைஞரை ஓடிச் சென்று பிடித்ததாக கூறப்படுகிறது.
போலீசாரிடம் ஒப்படைப்பு
இதனைத் தொடர்ந்து, அந்த நபரிடம் இருந்த மாற்றுத் திறனாளியின் 8,500 ரூபாய் பணத்தை, ஆட்டோ ஓட்டுநர்கள் கைப்பற்றியுள்ளனர். அது மட்டுமில்லாமல், தப்பித்துச் செல்ல முயன்ற அந்த நபரை, ரெயில்வே போலீசாரிடமும் ஒப்படைத்துள்ளனர்.
வைரலாகும் வீடியோ
இதனிடையே, அந்த வடமாநில இளைஞர் போலீசார் விசாரணை மேற்கொண்டிருந்த்த போது, அவர்களிடம் தப்பித்துச் சென்றதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, அவரை போலீசார் தேடி வருகின்றனர். பின்னர், மீட்கப்பட்ட பணத்தையும் சம்மந்தப்பட்ட நபரிடம் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பாக, ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவரும், மாற்றுத்திறனாளியிடம் பணத்தை ஒப்படைக்கும் வீடியோக்கள், இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
என்னது நிலவுல 'தண்ணி' இருக்கா..? சீன விண்கலம் வெளியிட்டுள்ள முக்கிய ஆதாரம்
இப்படியும் சிலர்
தங்களின் உடலில் இருக்கும் குறைகளை எல்லாம் தாண்டி, இன்றைய சமுதாயத்தில் தங்களாலான ஒன்றை செய்து, வாழ்க்கையினை நடத்தும் மாற்றுத் திறனாளிகள் பலர் உள்ளனர். அப்படி இருக்கும் ஒருவரிடம் கூட, திருடும் எண்ணத்துடன் ஒரு வாலிபர் நடந்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், அதே வேளையில், நிஜ ஹீரோக்களாக மாறி, மாற்றுத்திறனாளியின் பணத்தை, அவரிடமே ஒப்படைக்க முயன்ற ஆட்டோ ஓட்டுநர்களையும் பொது மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
மற்ற செய்திகள்