'சிவன்' பாதத்தை காண '4560 அடி' மலையேறிய இளைஞர்... திடீர் 'மூச்சுத்திணறலால்' மயங்கி விழுந்து... அடுத்து நடந்த விபரீதம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நண்பர்களுடன் 4560 அடி மலையேறிய இளைஞர் மூச்சுத்திணறலால் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென்மகா தேவமங்கலம் பகுதியில் உள்ளது புகழ்பெற்ற பர்வதமலை. இம்மலைமீது சிவன் தனது பாதம் வைத்ததாக வரலாறு. இதனால் தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் இந்த மலைக்கு ஏராளமான பக்தர்கள் பவுர்ணமி நாளில் வருகை புரிவது உண்டு. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த காமராஜ் என்னும் இளைஞர்(27) நண்பர்கள் மூன்று பேருடன் பர்வத மலைக்கு சென்றுள்ளார்.
நன்றாக மலையேறிய காமராஜ் மலை உச்சியில் உள்ள சிவன் பாதத்துக்கு சென்றபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ந்து போன அவரது நண்பர்கள் உடனடியாக 108-க்கு போன் செய்துள்ளனர். மேலும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனர். தொடர்ந்து முதலுதவி குழுவினரும் மேலே சென்று முதலுதவி அளித்துள்ளனர். இதையடுத்து தீயணைப்பு துறையினர் டோலிகட்டி காமராஜை மலை மீது இருந்து கீழே கொண்டு வந்துள்ளனர்.
ஆனால் வரும் வழியிலேயே காமராஜ் இறந்து விட்டார். இது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதுபோன்ற உயிரிழப்புகள் அடிக்கடி ஏற்படுவதால் மலை அடிவாரத்தில் முதலுதவி மருத்துவக்குழுவை அரசு அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.