'கண்' தெரியாமல் தஞ்சமடைந்த 'காட்டுமாடு'... கொரோனாவிற்கு மத்தியிலும் 'இளைஞர்கள்' செய்த காரியம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பார்வைக்குறைபாடு காரணமாக ஊருக்குள் தஞ்சமடைந்த காட்டுமாடு ஒன்றுக்கு கேத்தி(ஊட்டி) பகுதி மக்கள் தஞ்சம் அளித்துள்ளனர்.

'கண்' தெரியாமல் தஞ்சமடைந்த 'காட்டுமாடு'... கொரோனாவிற்கு மத்தியிலும் 'இளைஞர்கள்' செய்த காரியம்!

பார்வைக்குறைபாடு காரணமாக இந்த மாடு கேத்தி பகுதியின் அருகேயுள்ள அரசு குடியிருப்புக்கு வந்துள்ளது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அந்த மாட்டுக்கு காலையும், மாலையும் பசும்புற்கள் மற்றும் தண்ணீர் அளித்து உதவி வருகின்றனர். கண் தெரியாததால் அந்த மாடு உணவு தேட மிகவும் சிரமப்படுகிறது. இதைப்பார்த்த மக்கள் அந்த மாட்டுக்கு தஞ்சம் அளித்து பாதுகாத்து வருகின்றனர்.

இதுகுறித்து வனப்பகுதியினர், ''இது கூட்டத்தால் விரட்டப்பட்ட ஒரு ஆண் காட்டுமாடு. வயது முதிர்வால் பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளது. காட்டுமாடுகளுக்கு முதிர்வால் பார்வைக்குறைபாடு ஏற்படுவது இயற்கைதான். இந்த வனத்தில் சிறுத்தை, புலி போன்றவை இருந்தால் அவற்றுக்கு உணவாகியிருக்கும். குடியிருப்பு அருகில் என்பதால் மக்கள் உதவி வருகின்றனர்,'' என தெரிவித்து வருகின்றனர்.