Tiruchitrambalam Mobile Logo Top
Viruman Mobiile Logo top

தோசை கூட வீட்டில் சுடாத கிராமம்.. "எல்லாத்துக்கும் அந்த ஒரு சாபம் தான் காரணமா??".. திகைக்க வைக்கும் 'வரலாறு'!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இன்று நம்மை சுற்றி நடக்கும் கல்யாணம், குடும்ப நிகழ்ச்சி எந்த ஒரு விசேஷமாக இருந்தாலும், எண்ணெயில் உருவாகும் பலகாரம், உணவுகள் உள்ளிட்டவற்றை உருவாக்குவார்கள்.

தோசை கூட வீட்டில் சுடாத கிராமம்.. "எல்லாத்துக்கும் அந்த ஒரு சாபம் தான் காரணமா??".. திகைக்க வைக்கும் 'வரலாறு'!!

Also Read | இந்தியா முழுவதும் டிராவல் செஞ்சு கின்னஸ் சாதனை.. ஆத்தாடி 3 மாசத்துக்குள்ள இவ்வளவு கிலோமீட்டரா.?

இது பல இடங்களில் பொதுவான ஒன்றாகவே பார்க்கப்படும் நிலையில், திருவண்ணாமலை பகுதியில் உள்ள கிராமங்களில் காலம் காலமாக எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் மூலம் பலகாரங்கள் செய்யாமலே இருப்பதும் அதற்கான காரணமும் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பண்டிதப்பட்டு, சின்னகோளாப்பாடி, பெரியகோளாப்பாடி, தீர்த்தமளி கிராமங்களில் வசிக்கும் 80 சதவீத மக்கள், எண்ணெயில் சுட்டு எடுக்கப்படும் வடை, முறுக்கு, மீன், சிக்கன் உள்ளிட்ட எதையுமே வீடுகளில் செய்ய மாட்டார்கள். இத்தனைக்கும் தோசை கூட அவர்கள் வீட்டில் சுட மாட்டார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதற்கெல்லாம் காரணம் என்ன என்பது குறித்து ஒரு தகவலும் தற்போது வெளி வந்துள்ளது. அதன் படி, ஒரு கர்ப்பிணி பெண்ணின் சாபம் தான் இது என சொல்லப்படுகிறது. பல தலைமுறைகளுக்கு முன்பாக வாழ்ந்த குடும்பத்தில் ஐந்து ஆண்களுடன் ஒரு பெண் பிள்ளையும் ஒரு குடும்பத்தினருக்கு பிறந்ததாக கூறப்படுகிறது.

ஒரே ஒரு சகோதரி என்பதால், அவர் மீது ஐந்து சகோதரர்களும் பாசமாக இருந்துள்ளனர். தொடர்ந்து, அவரின் திருமணத்திற்கு பின்னர், சுகப்பிரசவத்திற்கு மீண்டும் தாய் வீட்டிற்கு வந்துள்ளார் அந்த பெண். தாய் இல்லை என்பதால், சகோதர்கள் மற்றும் அவர்களின் மனைவி தான் சகோதரியை பார்த்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அப்போது, சகோதரர்களின் மனைவிகள், கர்ப்பிணி பெண்ணுக்கு எதுவும் கொடுக்காமல், அவர்களே வகை வகையாக எண்ணெயில் பலகாரம் மற்றும் உணவு வகைகளை தயாரித்து சமைத்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, சண்டையும் உருவானதாக தகவல் குறிப்பிடும் நிலையில், வேதனையில் இருந்த அந்த கர்ப்பிணி பெண் விபரீத முடிவு எடுத்து உயிரிழந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

சகோதரி இறந்த காரணம் தெரியாமலே இருந்த சகோதரர்களின் கனவில், அய்யனார் வந்து, தங்கையின் முடிவுக்கு உங்களின் மனைவிகள் தான் காரணம் என்றும், சகோதரி உயிரிழக்கும் போது, தான் பிறந்த வம்சத்தில் யாரும் இனி எண்ணெய் பலகாரங்கள் செய்யக் கூடாது என்றும் மீறி செய்தால், அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் எண்ணெய் கொப்பளம் போட்டு இறந்து விடுவார்கள் என்றும் சாபம் போட்டதாக அய்யனார் கூறி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

Village with people who dont make oil foods

இதன் பின்னர் தான், அந்த ஊரில் உள்ளவர்கள் எண்ணெய் பலகாரங்கள் செய்வதே இல்லை என்றும் கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல், உயிரிழந்த அந்த கர்ப்பிணி பெண்ணை தெய்வமாகவே கருதி, முன்னோர்களும் வணங்கி வந்ததாக கூறப்படுகிறது. அதே போல, இங்குள்ள கிராமங்களின் வீட்டில் பெண் குழந்தைகள் பிறந்தால், அவர்கள் திருமணமாகி வேறு வீட்டுக்கு சென்ற பிறகு, அந்த வீட்டில் எண்ணெய் பொருட்கள் தயாரித்து உண்ணலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. சந்தியம்மன் கோவிலுக்கு பின் உள்ள வரலாற்றினை அப்பகுதியிலுள்ள முதியோர்கள் தெரிவிக்கின்றனர்.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பாக கூட, ஒரு குடும்பம் இதனை மீறி, எண்ணெய் பொருட்கள் செய்ததாகவும், இதன் காரணமாக உடலில் கொப்பளங்கள் ஏற்பட்ட நிலையில், அந்த அம்மனுக்கு கிடா வெட்டியதாக கூறிய பின்னர், அவர் மறைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

மேலும், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, ஆடி மாதத்தில், சந்தியம்மன் கோவிலுக்கு திருவிழாவும் எடுப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. சமீபத்தில் கூட, இந்த கோவிலில் திருவிழா நடந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | சென்னை விமான நிலையத்தில்.. பயணிகள் ஓய்வெடுக்க அசத்தல் கேப்சூல் hotel.. "என்னென்ன வசதி எல்லாம் இருக்கு??"

VILLAGE, OIL FOODS, PEOPLE

மற்ற செய்திகள்