“போச்சே.. போச்சே”... அசீம் பத்தி சீரியஸாக சொல்லவந்த விக்ரமன்.. கிச்சன்ல இருந்து GP முத்து வின் செம டைமிங்.. விழுந்து விழுந்து சிரிச்ச ஹவுஸ்மேட்ஸ் 😅
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
Also Read | “பொங்கல் பரிசு 1000 ரூபா மிஸ் பண்ணிட்டீங்களா..? சரி நான் தரேன்”.. மூதாட்டியை நெகிழவெச்ச காவலர்..!
இந்த போட்டி சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சமீபத்தில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார். மேலும், கடந்த வாரம் நடந்த Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி உள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த வார இறுதியில் தோன்றி இருந்த கமல்ஹாசன், கடந்த வாரம் போட்டியாளர்களின் செயல்பாடு குறித்தும் நிறைய விஷயங்களையும் பேசி இருந்தார்.
இந்நிலையில், ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அசல் கோலார், GP முத்து, மெட்டி ஒலி சாந்தி, ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளனர். முன்னதாக பிக்பாஸ் வீட்டுக்குள் முதல் நாள் வந்தபோதே, ஜிபி முத்து, தான் மட்டும் தனியே இருந்ததாக கமலிடம் சொல்லி புலம்பிக்கொண்டிருந்தார். அப்போது அவரை மேலும் பயமுறித்திய நடிகர் கமல்ஹாசன் ஜாலியாக ரசித்தார். பின்ன ஜிபி முத்து மழையில் ஆடினார். பிக்பாஸ் வீட்டுக்குள்ளும் போட்டியாளர்கள் குழுவாக பிரிந்தபோதும் கூட, மற்ற அணிகளுக்கு ஹெல்ப் பண்ணுவேன் என அடம் பிடித்து அனைவருடனும் பழகினார்.
இந்நிலையில் அனைவர் முன்னிலையிலும், “அசீம் பற்றி சொல்லணுமா” என விக்ரமன் ஆரம்பிக்க, அந்த பக்கம் சாப்பிட்டு முடித்த தட்டினை ஜிபி முத்து கிச்சனில் கழுவிக் கொண்டிருந்தார்.
அப்போது களுக்கென சத்தம் வர, ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் “போச்சே... போச்சே” என ஜாலியாக கிண்டல் அடிக்க, அசீமே சிரித்துவிட்டார். ஆனால் விக்ரமனோ, “இதுக்கெல்லாம் அசரக்கூடாது உட்காருங்க” என சொல்ல, இப்படி ஒரே ரகளை தான் ஜிபி முத்துவுடன்.
நீண்ட நாட்கள் கழித்து ஜிபி முத்து பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தந்திருப்பது அவரை மிஸ் பண்ணிய பலருக்கும் கொண்டாட்டமாக இருந்து வருகிறது.
Also Read | "அவங்க இல்லாதது ஃபீலிங்கா இருக்கு".. "அவரே ஃபீல் பண்ணல".. GP முத்துவிடம் ஷிவின் அடித்த கமெண்ட்..! 😅
மற்ற செய்திகள்