Vikraman : “தமிழ்நாடு தமிழ்நாடு தான்”.. நடப்பு சர்ச்சை தெரியாம சொன்ன விக்ரமன்.. “தெரிஞ்சு சொல்றீங்களா? தெரியாம சொல்றீங்களா?” - ஷாக் ஆன டிடி.
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
Also Read | விக்ரமன் & ராம் புகழாரம்! உணர்ச்சிப்பெருக்கில் கதறி அழுத ஷிவின் .. நெகிழ்ச்சி தருணம்!
பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.
இந்நிலையில், தற்போது பிக்பாஸ் 6-வது சீசன் ஆரம்பமாகி உள்ளது. இதில், பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கினர்.
அதன்படி இந்நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரச்சிதா மகாலட்சுமி, மணிகண்டா ராஜேஷ், சாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, (வைல்டு கார்டு எண்ட்ரியில்) மைனா உள்ளிட்ட நபர்கள் பங்கேற்றனர்.
இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். பின்னர் அசல், ஷெரீனா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்ஸி, ராம், ஆயிஷா, ஜனனி, தனலட்சுமி, மணிகண்டா ராஜேஷ், ரச்சிதா ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர்.கடைசிவாரத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்து ADK வெளியேறினார். தற்போது இந்நிகழ்ச்சி சுமார் 98 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் பிக்பாஸ் வீட்டுக்குள் எலிமினேட் ஆன போட்டியாளர்கள் மீண்டும் வந்திருந்தனர். இதனிடையே அசிம், விக்ரமன், ஷிவின் ஆகியோர் ஃபைனலிஸ்ட் ஆகியுள்ளனர்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் போன டிடியிடம் பொங்கல் கொண்டாடும்போது விக்ரமன், “தமிழ்நாடு என்பது அண்ணா, சங்கரலிங்கனார் முதலான அறிஞர்களால் போராடிப் பெறப்பட்ட பெயர். சில கூட்டம் தமிழ்நாடை பிரிக்க முயற்சிக்கும்போது தமிழ்நாடு தமிழ்நாடுதான் என உரக்க சொல்ல வேண்டியிருக்கு. அதை பெயரளவில் சாத்தியம் ஆக்கியவர்களுக்கு இந்த பொங்கல் நன்னாளில் நன்றி செலுத்த வேண்டும்” என கூறினார்.
இதை கேட்ட டிடி, “இதை தெரிஞ்சு சொல்றீங்களா.. தெரியாம சொல்றீங்களானு தெரியல விக்ரம்” என ஷாக் ஆனவர், “தமிழ்நாடு தமிழ்நாடு தான்,. அது தான் பொருத்தமான பெயர்” என விக்ரமனை ஆதரித்துவிட்டு, பின்னர், தான் சொன்னதற்கான காரணம் வெளியே சென்றால் புரியும் என தெரிவித்தார்.
Also Read | “இது எங்க தல பொங்கல்.!”.. வீடியோவில் வந்து வாழ்த்து சொன்ன ஆதி - நிக்கி கல்ராணி! | Aadhi Nikki Galrani
மற்ற செய்திகள்