"ரிசல்ட் பாத்துட்டு கலங்கிட்டோம், சாப்பிட கூட இல்ல".. ரசிகர்களின் அன்பால் நெகிழ்ந்த விக்ரமன்!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழில் சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் சிறப்பாக நடந்து முடிந்தது.
Also Read | "இனிமே சிவாங்கி செஃப் போல?".. புது கெட்அப்பில் வந்த கோமாளி?.. குஷியான குக் வித் கோமாளி செட்
இந்த நிகழ்ச்சியில், முதலில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்த நிலையில், ஒவ்வொரு எபிசோடும் மிக விறுவிறுப்பாக சென்றதால் பார்வையாளர்களும் மிகவும் ரசித்தபடி இந்த நிகழ்ச்சியை கண்டுகளித்து வந்தனர்.
முந்தைய சீசன்களைப் போல இந்த பிக்பாஸ் சீசனும் பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், யார் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்ப்பும் முதல் வாரத்தில் இருந்தே பார்வையாளர்கள் மத்தியில் பரவலாக இருந்து வந்தது.
அசிம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகிய மூன்று பேர் ஃபினாலேவுக்கு முன்னேற்றம் கண்டிருந்தனர். பிக் பாஸ் Finale ஆட்டம், பாட்டம் என அமர்க்களமாக செல்ல இதன் இறுதியில் வெற்றியாளர் யார் என்பதை கமல்ஹாசன் அறிவித்திருந்தார். அதன்படி அசிம் 6 ஆவது பிக்பாஸ் சீசனின் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட, இரண்டாவது இடத்தை விக்ரமன் பிடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தை ஷிவின் பிடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
தற்போது பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்திருந்த விக்ரமன், தனக்கு கிடைத்த ஆதரவு குறித்து சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். இந்த நிலையில், தற்போது லைவிலும் தோன்றி இருந்த விக்ரமன், பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்தும் தன்னுடன் ஆடிய போட்டியாளர்கள் குறித்தும் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
அந்த வகையில், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தனக்கு கிடைத்த ஆதரவு பற்றி பேசிய விக்ரமன், "ஒரு பெரிய ஆதரவு கிடைச்சிருக்கு. ரொம்ப Massive ஆன சப்போர்ட். எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வந்த தன்னெழுச்சியான ஆதரவு. ஒவ்வொருத்தர் வீட்லயும் எங்க வீட்டு பிள்ளை அப்படின்னு சொல்ற அளவுக்கு மக்கள் என் மேல் அன்பு காட்டுறாங்க. அது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. வெற்றியை விட இதுதான் ரொம்ப பெருசா இருக்கு.
என்னை நிறைய பேர் அழைச்சு வாழ்த்தி இருந்தாங்க. வீடியோ கால் பண்ணி பேசுன பலரும் தாய்மார்கள் தான். 'தங்கம் நீ வந்து ஜெயிச்சுட்டே தங்கம். இரண்டு நாள் சாப்பிடவே முடியல. அந்த ரிசல்ட் பாத்துட்டு நாங்க டிவி ஆஃப் பண்ணிட்டோம். எங்களுக்கு சாப்பிட முடியல அப்படின்னு சொன்னாங்க. இது சொல்லலாமான்னு தெரியல, கஷ்டமா இருக்கு. ஒரு நபர் Fix வந்து ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகி இருக்காங்க. அவங்களுக்கு கால் பண்ணி பேசினேன். அதே மாதிரி ஒரு நபர் வந்து ரொம்ப அழுது Migraine வந்துச்சுன்னு சொன்னாங்க. இத பார்க்கும்போது எனக்கு OverWhelming ஆன அன்பா இருந்தது. எனக்கு அது கண்ணீர் வரவழைக்கக் கூடிய ரொம்ப நெகிழ்வான தருணங்களா இருந்தது.
என் அண்ணன் ஜெயிக்கணும், தம்பி ஜெயிக்கணும், பையன் ஜெயிக்கணும்ன்னு தான் எல்லாரும் பார்த்து இருக்காங்க. அது தான் ரிசல்ட்ல அவங்களுக்கு ஒரு ஏமாற்றத்தை கொடுத்துருக்கு. ஆனா, அந்த ரிசல்ட்டையோ, பரிசையோ, கோப்பையையோ நான் பெருசா பார்க்கல. அவங்க அன்பை தான் நான் பெருசா பாக்குறேன். அது எனக்கு கிடைச்சுருச்சு" என உருக்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
Also Read | "எல்லார் மனசுலயும் நின்னுட்டீங்க".. வெளிய வந்த ஷிவினுக்கு பிரம்மாண்ட Surprise கொடுத்த ரச்சிதா!!
மற்ற செய்திகள்