'1 மணிக்கு ரிலீஸ் ஆகவேண்டிய படம்'.. 'அடித்து.. உடைத்து'.. பேனரை கிழித்த'.. 'பிகில்' ரசிகர்கள்!.. வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கிருஷ்ணகிரி நகரின் மையப்பகுதியாக உள்ளது கிருஷ்ணகிரி காவல் கட்டுப்பாட்டு அறையின் அருகே உள்ள ரவுண்டானா. ஏறக்குறைய நகரின் முக்கிய திரையரங்குகள் மூன்றுமே இந்த ரவுண்டானாவை சுற்றியே அமைந்துள்ளன.

இந்நிலையில், அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடிப்பில் உஆருவாகியுள்ள பிகில் படம், இரவு 1 மணிக்கு வெளியாகும் என்று நம்பி பல நூறு ரசிகர்கள் இங்கு கூடியுள்ளனர். ஆனாலும் நள்ளிரவில் வெளியாகவிருந்ததாக சொல்லப்பட்ட படம் 3 மணிக்கு வெளியாகும் என காத்திருந்தனர்.
எனினும் 3 மணிக்கும் படம் வெளியாவகவில்லை என்று கடுப்பான ரசிகர்கள், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு எதிரே வைக்கப்பட்டிருந்த தடுப்புக் கம்பிகள், பேனர்கள் உள்ளிட்டவற்றை அடித்தும், உடைத்தும், கிழித்தும் எறிந்து அந்த இடத்தையே போர்க்களமாக மாற்றியுள்ள காட்சிகள் வீடியோக்களாக வலம் வருகின்றன.
தவிர, போலீஸாரின் வாகனம் வரும்பொழுது அதன் அருகிலேயே இடைவிடாது பட்டாசுகளை வெடித்துள்ள சம்பவமும் வீடியோக்களாக இணையத்தில் வலம் வருகின்றன.