‘தீபாவளி வேற வருது’...!!! ‘கொரோனா 2-வது அலை உருவாகாமல் இருக்க’...!! மக்கள் இதப் பண்ணனும்’...!!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக குறைந்து வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

‘தீபாவளி வேற வருது’...!!! ‘கொரோனா 2-வது அலை உருவாகாமல் இருக்க’...!! மக்கள் இதப் பண்ணனும்’...!!!

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ‘தமிழகத்தில் கொரோனா பரிசோதனை முடிவுகளை வேகமாக அளிக்கும் வகையில் முன்னேற்றம் அடைந்துள்ளோம். இதனால் கொரோனா நோய்த்தொற்று வேகமாக குறைந்து வருகிறது.

ஒரு கோடி ஆர்டி பிசிஆர் கருவிகளை வாங்கி பயன்படுத்தி தமிழகம் முன்னோடியாக உள்ளது. தமிழகத்தில் 4.39 லட்சம் காய்ச்சல் முகாம்கள் இதுவரை நடத்தப்பட்டுள்ளன. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக முகக் கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளி கடைப்பிடிக்காதவர்கள் என10 லட்சம் பேரிடம் அபராதம் வளர்ச்சியடைந்துள்ளோம்.

கொரோனா இரண்டாவது அலை உருவாகாமல் தடுக்க மக்களின் பங்களிப்பு அவசியம். தீபாவளி போன்ற பண்டிகைகளில் குடும்ப உறுப்பினர்கள் ஒன்று கூடுதல், அலுவலங்களில் ஒன்று கூடுதல் உள்ளிட்டவற்றால் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. தொற்று அதிகம் பரவ பண்டிகைக் காலம் காரணமாகி விடக்கூடாது என்பதால் கவனமுடனும், கட்டுப்பாடுடனும் தீபாவளியை கொண்டாட வேண்டும்.

Vijayabaskar requested safe diwali in corona situation

கொரோனா தொற்று பரவலின் 2-வது அலையில் இருந்து வளர்ந்த நாடுகளே மீள முடியவில்லை. ஆனால், தமிழக அரசின் தீவிர நடவடிக்கைகளால் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது.  இதனால் பலி எண்ணிக்கை ஒருநாளைக்கு 30 என்ற வகையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுகாதாரத்துறை கட்டமைப்பு மிகச்சிறப்பாக உள்ளது’ என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

மற்ற செய்திகள்