Seeman : “தம்பி விஜய் தான் என்னை ஆதரிக்க வேண்டும்” - விஜய்யின் அரசியல் எண்ட்ரி குறித்து சீமான்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகர் விஜய் திரைப்படத்தில் முன்னணி நடிகராக நடித்து வருவதுடன், தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தமது ரசிகர்களை கொண்டு பல்வேறு நலத்திட்ட மற்றும் சமூகம் சார்ந்த செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறார். அவ்வப்போது ரசிகர்களை சந்திப்பதையும் வாடிக்கையாக வைத்துள்ளார்.
இதேபோல் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக சீமான், தேர்தல் களத்தில் சமூக களத்திலும் தமது தொண்டர்களுடன் இயங்கி வருகிறார். அரசியல் மேடைகள், பொதுக்கூட்டங்கள், திரைப்பட விழாக்கள், டிஜிட்டல் ஊடக நிகழ்வுகள் என பலவற்றிலும் பரவலாக இடம்பெறும் சீமான், தமிழ் மண் சார்ந்த தமது மாற்றுக் கருத்துக்களை பேசியும் வருகிறார்.
இந்நிலையில் நடிகர் விஜயின் அரசியல் இயக்க செயல்பாடுகள் குறித்து பேசிய சீமான், “விஜய் தரப்பில் செய்வதை பார்க்கும் பொழுது அவர்கள் அரசியல் வருவதற்காக முயற்சிப்பது தெரிகிறது. அதை நான் வரவேற்கிறேன். தற்போது இருக்கும் சூழலில் அரசியல் மாற்று என்பது குறித்து பார்க்கும் பொழுது இந்த கட்சியை விட்டால் அந்த கட்சி, அந்த கட்சியை விட்டால் இந்த கட்சி என்று ஒரு அரை நூற்றாண்டு காலத்தை இந்த மண் கடந்து விட்டது.
இந்த சூழலில் தம்பி விஜய் எல்லாம் அரசியலுக்கு வரும்பொழுது இன்னும் வலிமையாக இருக்கும்; எல்லாவற்றிற்கும் நாங்களே தனித்து சண்டையிட வேண்டியதாக இருக்கிறது. அதற்கான முயற்சிகள் எல்லாம் ஒரு முன்னெடுப்புதான். நாங்கள் தொடக்கத்தில் இயக்கமாக இருக்கும்பொழுது இவற்றையெல்லாம் செய்தோம். இப்போது விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று நினைக்கிறார். அதற்காக பல முயற்சிகளை செய்கிறார்கள்.” என பேசினார்.
மேலும் பேசியவர், விஜய் அரசியலுக்கு வந்தால் அவருக்கு உங்களுடைய ஆதரவு இருக்குமா என்று நிரூபர்கள் கேட்டபோது, “நான் யாரையும் ஆதரிக்க முடியாது. நாங்கள் ஒரு தனித்த பேரியக்கம். எனக்கு ஒரு கனவு இருக்கிறது. எனவே தம்பி விஜய் தான் என்னை ஆதரிக்க வேண்டும், நான் யாரையும் ஆதரிக்க முடியாது!” என்று பேசினார்.
மற்ற செய்திகள்