“அடிக்குற அடியில”... சீமான் பேச்சால் கொந்தளித்த விஜய் ரசிகர்கள்!.. ‘அதிரும் சமூக வலைதளங்கள்!’.. ‘தயாரான போஸ்டர்கள்!’

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தொடக்கம் முதலே ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவதை விமர்சித்து வந்தார் சீமான்.

“அடிக்குற அடியில”... சீமான் பேச்சால் கொந்தளித்த விஜய் ரசிகர்கள்!.. ‘அதிரும் சமூக வலைதளங்கள்!’.. ‘தயாரான போஸ்டர்கள்!’

தற்போது ரஜினிகாந்த அரசியலுக்கு வருவது தொடர்பான பேச்சுகளும் முடிவுகளும் இன்னும் சூடுபிடிக்கும் நிலையிலும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ரஜினியை இன்னும் நேரடியாக எதிர்த்து வருகிறார். இதேபோல், அரசியல் கட்சி தொடங்கியுள்ள கமல்ஹாசனையும் சீமான் விமர்சித்து வருகிறார்.

ALSO READ: “கோலிக்கு ஒரு ரூலு... நடராஜனுக்கு ஒரு ரூலா...??? பாவம்யா, நடராஜன்...!!” - தமிழக வீரருக்காக கோபத்தில் கொந்தளித்த முன்னாள் வீரர்!!! - என்ன நடந்தது, நடராஜனுக்கு??!

Vijay Fans got angry and trolling seeman after his speech TN Politics

இந்த நிலையில், செய்தியாளர்களை நேற்றைய தினம் சந்தித்த சீமான், “எங்களுடைய வரலாறு தெரியாதவர்கள் எங்களை எப்படி வழிநடத்திச் செல்ல முடியும்?, ரஜினியின் படங்களை நாங்கள் குறைகூறவில்லை. ஆனால் நடித்துவிட்டால் மட்டும் எங்கள் மக்கள் மீது ஆட்சியதிகாரத்தை செலுத்தலாம் என நினைக்கும் எந்த நடிகருக்கும், இந்த ரஜினி, கமலை அடிக்கிற அடியில் இனி அரசியலுக்கு வரவேண்டும் என்கிற எண்ணமே வராது. ஆம், இது விஜய்க்கும் சேர்த்துதான்” என்று கடுமையாக பேசினார். மேலும் புத்தெழுச்சி பெறும் ஒரு இனத்தின் தன்மானப் பிரச்சனைதான் இது என்றும், தான் நடித்திருந்தாலும், ரசிகர்களை சந்திக்கவில்லை, நேரடியாக மக்களையே சந்தித்ததாகவும் சீமான் பேசினார்.

சீமானின் இந்த ஆவேச பேச்சு விஜய் ரசிகர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.  இதனால் சீமான் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் மற்றும் அபிமானிகள் சீமானுக்கு எதிரான ஹேஷ்டேகுகள் மூலம், இந்திய அளவில் சீமான் பேசியதை விமர்சித்தும், சீமான் பேசிய “அடிக்குற அடியில” என்கிற வசனங்களை வைத்தே சீமானுக்கு எதிரான மீம்ஸ்களை பதிவிட்டும் ட்ரண்ட் செய்து வருகிறார்கள்.

ALSO READ: #Video: 'இந்த ரஜினி, கமல் 2 பேரையும் அடிக்குற அடியில'.. 'இனி எந்த நடிகனும்'... 'இது விஜய்க்கும் சேர்த்துதான்!'.. 'ரஜினி படத்தையே உதாரணம் காட்டி'.. கொந்தளித்த சீமான்!.. வீடியோ!

Vijay Fans got angry and trolling seeman after his speech TN Politics

அத்துடன் பலர் சீமானுக்கு எதிராக போஸ்டர்கள் அடித்தும், பிளக்ஸ் பேனர்களை அடித்தும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தும், அவ்வாறு போஸ்டர்கள் பிரிண்ட் ஆகிக் கொண்டிருக்கும் வீடியோக்களை ட்விட்டரில் பதிவிட்டும் வருகிறார்கள்.

மற்ற செய்திகள்