'அசுர வேகத்தில் வந்த லாரி'... 'எதை பற்றியும் யோசிக்காமல் குதித்த இளைஞர்'... நெஞ்சை உலுக்கும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்புதிதாக அமைக்கப்பட்டுள்ள நான்கு வழிச்சாலையில், இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் புதிதாக நான்கு வழிச் சாலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையின் நடுவே இளைஞர் ஒருவர் நீண்ட நேரமாக வந்து நின்று கொண்டு இருந்தார். அவர் சாலையைக் கடக்கத் தான் நிற்கிறார் என எண்ண நினைப்பதற்கும், எதிரே வரும் லாரியின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
தாராபுரம் தெற்கு கிராம நிர்வாக அலுவலர் ஸ்ரீதர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற தாராபுரம் காவல்துறையினர் உடலைக் கைப்பற்றினர். பின்னர், தாராபுரம் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்கள். அவர் எதற்காகத் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
தற்கொலை எண்ணம் தோன்றுபவர்கள், மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 போன்றவற்றைத் தொடர்பு கொண்டால் இலவசமாக ஆலோசனைகள் பெறலாம்.
மற்ற செய்திகள்