வங்கிக்குள் திடீரென ‘துப்பாக்கி, கத்தியுடன்’ நுழைந்து.. ‘தாக்குதல் நடத்திய நபரால் பரபரப்பு’.. ‘கோவையில்’ நடந்த அதிர்ச்சி சம்பவம்..
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோவை இராமநாதபுரம் பகுதியில் உள்ள கனரா வங்கியில் துப்பாக்கி, கத்தியுடன் நுழைந்த நபர் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை இராமநாதபுரம் சுங்கம் பகுதியில் உள்ள கனரா வங்கியில் லோன் பெற்று தருவதாகக் கூறி இடைத்தரகர் குணாளன் என்பவர் வெற்றிவேலன் என்பவரிடமிருந்து 3 லட்சம் ரூபாய் வாங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவர் லோன் பெற்று தராமல் காலம் தாழ்த்திக்கொண்டே சென்றதால் ஆத்திரமடைந்த வெற்றிவேலன் நேற்று வங்கிக்கு சென்றுள்ளார்.
அங்கு இடைத்தரகர் குணாளன் வங்கி தலைமை மேலாளர் சந்திரசேகருடன் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து அந்த அறைக்குள் துப்பாக்கி, கத்தியுடன் நுழைந்த வெற்றிவேலன் அவரைத் தாக்கத் தொடங்கியுள்ளார். குணாளனை காப்பாற்றச் சென்ற வங்கி தலைமை மேலாளர் சந்திர சேகர் மற்றும் ஊழியர்கள் மீதும் சிறிய கத்தி கொண்டு அவர் தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சந்திரசேகர் அளித்த புகாரின் அடிப்படையில் வெற்றிவேலனைக் கைது செய்துள்ள போலீஸார் அவர்மீது கொலை மிரட்டல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து இடைத்தரகர் குணாளனிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தின்போது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
கோவை கனரா வங்கியில் துப்பாக்கி, கத்தி உடன் நுழைந்து ஊழியர்கள் மேல் தாக்குதல்#Coimbatore | https://t.co/qfb8QrrFTd pic.twitter.com/t9fKoVIeZA
— News18 Tamil Nadu (@News18TamilNadu) December 4, 2019