VIDEO: "விஜய் தன் அப்பாவுக்கு எதிராகவே... கோபத்தில் பொங்கி எழ... உண்மையான காரணம் என்ன???" - போட்டுடைக்கும் பத்திரிகையாளர்!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகர் விஜய் குறித்தும், அவரை சுற்றியுள்ள சமீபத்திய அரசியல் சர்ச்சை குறித்தும் மூத்த பத்திரிக்கையாளர் பிஸ்மி அவர்கள் Behindwoodsக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பல முக்கியமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக பதிவு செய்யப்பட்டதையடுத்து, நடிகர் விஜய் தரப்பிலிருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், தன் தந்தையின் கட்சிக்கும் தன் ரசிகர்களின் இயக்கத்துக்கும் தொடர்பில்லை என்பதால் அதில் இணைத்துக்கொண்டு பணிபுரிய வேண்டாம் எனவும், தன் பெயரையோ, புகைப்படத்தையோ அதுதொடர்பாக பயன்படுத்தினால், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது.
இந்த அடுத்தடுத்த சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து மூத்த பத்திரிக்கையாளர் பிஸ்மி அவர்கள் Behindwoodsக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், "வெளியுலகத்தில் இருந்து பார்க்கும்போது விஜயுடைய அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர், அவர் தன் மகனுக்காக மகன் பெயரிலொரு கட்சி ஆரம்பிச்சிருக்காரு, அப்படிதான் நம்ம தூரத்துல இருந்து பாக்கும்போது அத நாம புரிஞ்சுக்குவோம். உண்மையில என்னன்னா அப்பா, மகன் இருவருக்கும் இடையிலுமே சுமுகமான ஒரு உறவு இல்லைங்கறதுதான் நமக்கு கிடைச்ச தகவல். இது விஜய் அவருக்கு நெருக்கமான நண்பர்கள் கிட்ட அவரே பகிர்ந்துகிட்ட தகவல் தான். விஜய் என்ன சொல்லிருக்காருனா, எனக்கும் எங்க அப்பாவுக்கும் எந்த தொடர்பும் இல்ல, அவர்கிட்ட பேச்சுவார்த்தையே ஐந்து வருஷமா இல்லைனு சொல்லிருக்காரு.
இதன்மூலம் நம்ம என்ன புரிஞ்சுக்கலாம்னா அப்பா, மகனுக்குள்ள எந்த உறவுமே இப்போ கிடையாது. அப்படி இருக்கும்போது எஸ்ஏசி நேற்று பதிவு பண்ணின அந்த கட்சிங்கறது விஜயோட ஒப்புதலோட தொடங்கப்பட்டிருக்காதுனுதான் நம்ம புரிஞ்சுக்கணும். அதனால தன்னோட ஆசைக்காக விஜய் பெயரைப் பயன்படுத்தி எஸ்ஏசி ஒரு கட்சி தொடங்கியிருக்காரு அத அப்படிதான் நம்ம முதல்கட்டமாக புரிஞ்சுக்க முடியுது. 5 வருஷமா அப்பா, மகனுக்குள்ள பேச்சுவார்த்தை கிடையாது. இது அப்போ வெளிய இருக்க மக்களுக்கும் தெரியாது. நம்மைப்போல ஊடகத்தில் இருக்கவங்களுக்கும் தெரியாது. இது ஒரு குடும்பத்துக்குள்ள நடக்கற விஷயம். இதை விஜய் அவரோட நண்பர்கள்கிட்ட சொல்லப்போய் நம்ம கவனத்திற்கு வந்திருக்கு.
எஸ்ஏசி என்ன கணக்கு போட்டிருப்பார்னா, நாம் விஜய் பேர்ல ஒரு கட்சியை தொடங்குவோம், நிச்சயமா அவரு இந்த கட்சிக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல, எங்க அப்பாவுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லைனு சொல்ல மாட்டாருன்னு. அதனால் நம்ம விஜய் பேருல கட்சியை தொடங்கி நாம என்ன நினைக்கிறோமோ அதை செய்யலாம்னு நினைச்சிருப்பாரு. ஆனா அவரே எதிர்பார்க்காத வகையில விஜய் உடனடியாக சில மணி நேரத்துலையே இந்த கட்சிக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லைனு அறிக்கை கொடுத்திட்டாரு. முன்னதாக விஜய்ய ஒரு நடிகராக, நட்சத்திரமாக உருவாக்கினதே எஸ்ஏசிதான். பொதுவாகவே நடிகர்களுக்கு நடிகரா வெற்றியடைஞ்சதும் அடுத்த இலக்கு அரசியலாக இருக்கு. அதனால விஜய் ஒரு நட்சத்திரமாக உச்சத்த எட்டிட்டாரு, அவரை அரசியலுக்கு கொண்டு போகணும்கறது எஸ்ஏசிக்கு ஒரு ஆசை. அதன் காரணமாக தான் கடந்த காலங்கள்ல விஜய்ய மன்மோகன் சிங்க மீட் பண்ண வைத்தது, மோடியை மீட் பண்ண வைத்தது எல்லாமே.
ஆரம்பத்தில் விஜய்க்கு அரசியல் ஆசை இல்லைன்னு தான் நான் கேள்விப்பட்டேன். விஜய் அவர் நண்பர்கிட்ட என்ன சொல்லிருக்காருன்னா, எனக்கு இதுல எல்லாமே ஆர்வமே கிடையாது. அவரே எனக்கு தெரியாம சில விஷயங்கள்ல என்னை இழுத்துவிட்டு எனக்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருக்காரு. உதாரணத்திற்கு ஒரு போன் வரும் அவங்க கிட்ட சரி வர்றேன்னு சொல்லுப்பா அப்படினு சொல்லுவாராம் எஸ்ஏசி. அப்போ அது யாரு என்னன்னு கேக்காமயே விஜய் அப்பா பேச்ச தட்டாம அவரு சொன்ன மாதிரியே செய்வாராம். அப்பறம்தான் தெரியுமாம் அப்போ அதிமுகவுக்கு ஆதரவாக நீங்க வர்றீங்களான்னு கேட்டிருப்பாங்க அதுக்கு இவரு ஆமா வர்றேன்னு பதில் சொல்லியிருப்பாராமாம். இதுபோன்ற சம்பவங்களால தான் அவரு அப்பா கிட்ட பேசுறதையே நிறுத்தியிருக்காரு.
ஏற்கெனவே எஸ்ஏசிக்கும் விஜய்க்கும் சுமுகமான உறவு இல்ல, ஆனா அதை விஜய் எங்கேயும் வெளிப்படுத்தல. ஆனால் அதையே தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு எஸ்ஏசி அதிகாரப்பூர்வ தகவல் போலவே விஜய் அரசியல் பத்தி பேசிட்டே இருக்காரு. அதனால தனக்கு சங்கடம் நேர்வதாக விஜய் பீல் பண்ணாலும் அதை அவரால வெளிப்படுத்த முடியல. அவரோட அந்த அமைதியை பயன்படுத்திக்கிட்டு எஸ்ஏசி விஜய் பெயரிலேயே கட்சி ஆரம்பிச்சதால தான் அவரு இப்போ இந்த அறிக்கை குடுத்திருக்காரு. இதுவே எஸ்ஏசி வேறு ஏதாவது பெயரில் கட்சி ஆரம்பித்திருந்தால் விஜய் அமைதியாக இருந்திருப்பார். ஆனால் விஜய் பெயரிலேயே ஆரம்பித்ததால் தான் அவரு உடனடியாக மறுப்பு தெரிவிச்சிருக்காருனு நான் நினைக்கறேன்.
அடுத்த எதிர்பார்ப்பு இப்போ அறிக்கையில் சொன்னதுபோவே விஜய் பெயரை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுப்பாரான்னு பொறுத்துதான் பார்க்கணும். ஒருவேளை அப்படி நடவடிக்கை எடுக்கலைன்னா அவங்க ரெண்டு பெரும் சேர்ந்து இதெல்லாம் பண்றங்களோன்னு சந்தேகம் வரும். விஜய் அவரு அரசியலுக்கு வர இது சரியான நேரம் இல்லைன்னு நினைத்திருக்கலாம். அவருக்கு நெருக்கமானவங்க கிட்ட பேசினதுல இருந்து கிடைச்ச தகவல் என்னன்னா, விஜய் 2026 சட்டமன்ற தேர்தலைதான் டார்கெட் பண்றாரு. அதுக்கு முன்னாடி தன்னோட இயக்கத்தை இன்னும் வலுவாக்கணும்னு நினைக்கிறாரு. ஆனால் எஸ்ஏசி வரும் தேர்தலிலேயே களத்தில் இறங்கி அறுவடை பண்ணனும்னு ஆசைப்பட்டிருப்பாரு. இந்த முரண்பாடு காரணமாகத்தான் இன்னிக்கு அப்பா, மகன் எதிரெதிர் துருவத்துல நிக்கறாங்கன்னு நான் நினைக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார். இதுபோல பிஸ்மி அவர்கள் பகிர்ந்துள்ள மேலும் பல தகவல்களை கீழே இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் விரிவாக தெரிந்துக்கொள்ளலாம்.
மற்ற செய்திகள்