தமிழகத்தை சிரிக்க வைத்த ‘சின்னக் கலைவாணர்’ விவேக் காலமானார்.. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நகைச்சுவை நடிகர் விவேக் காலமானார்.

தமிழகத்தை சிரிக்க வைத்த ‘சின்னக் கலைவாணர்’ விவேக் காலமானார்.. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்..!

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகரான விவேக், மறைந்த இயக்குநர் கே.பாலசந்தரின் ‘மனதில் உறுதி வேண்டும்’ படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்தார். ரஜினி, அஜித், விஜய் தொடங்கி தற்போதுள்ள நடிகர்கள் வரை 200-க்கும் அதிகமான படங்களில் நடைத்துள்ளார்.

Veteran comedian Vivek passes away in Chennai

தான் நடிக்கும் படங்களில் சமூக கருத்துக்களை கூறி ‘சின்னக் கலைவாணர்’ என பெயரெடுத்த விவேக், தொடர்ந்து சமூக சார்ந்த விஷயங்களுக்கு குரல் கொடுத்து வருந்தார். மேலும் பசுமை இந்தியாவை முன்னெடுக்கும் விதமாக கோடிக்கணக்கான மரங்களை விவேக் நட்டுள்ளார். இதுதொடர்பான விழிப்புணர்வையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வந்தார்.

Veteran comedian Vivek passes away in Chennai

இந்த நிலையில் நேற்று காலை சினிமா படிப்பில் ஈடிபட்டுக் கொண்டிருந்த நடிகர் விவேக்கிற்கு, திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து உடனடியாக வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனை அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

Veteran comedian Vivek passes away in Chennai

முன்னதாக அவர் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டார். விவேக்கின் மாரடைப்புக்கு தடுப்பூசி காரணம் அல்ல என மருத்துவமனை நிர்வாகம் நேற்று அறிக்கை வெளியிட்டது. இதனிடையே விவேக் விரைவில் உடல் நலமடைய வேண்டும் என பலரும் பிரார்த்தனை செய்து வந்தனர்.

Veteran comedian Vivek passes away in Chennai

இந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி நடிகர் விவேக் காலாமானார். இது தமிழக திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்