வாவ்..! ‘இது ரொம்ப ரொம்ப ரேர்’.. 3 வருசத்துக்கு முன்னாடி ‘சென்னையில்’ இதை பார்த்தது.. வெதர்மேன் வெளியிட்ட ‘சூப்பர்’ வீடியோ..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை கால்வாயில் சிறிய சூறாவளி உருவான வீடியோ ஒன்றை தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நிவர் புயல் காரணமாக சென்னையில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்தது. இதனால் சென்னையின் பிரதான ஏரியான செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகள் நிரம்பின. இதனை அடுத்து ஏரியின் நீர் திறக்கப்பட்டதால், அடையாறு ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில் சென்னை கால்வாய் ஒன்றில் சிறிய சூறாவளி ஒன்று உருவான வீடியோவை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், ‘நேற்று சென்னை புறநகர் பகுதியில் பக்கிங்காம் கால்வாயில் மிக மிக அரிய சூறாவளி ஏற்பட்டது. அதன் தண்ணீர் சுழற்சியையும் மேகக் கூட்டங்களையும் பாருங்கள். எண்ணூரில் கடந்த 2017ம் ஆண்டு தண்ணீரில் இதுபோன்ற சூறாவளி ஏற்பட்டது. அதன்பிறகு தற்போதுதான் இதுபோல் ஏற்பட்டுள்ளது’ என பிரதீப் ஜான் பதிவிட்டுள்ளார்.
Wow Very very rare small Water sprout seen yesterday in Chennai suburb. See the water for circulation and clouds above.
Last time we saw water sprout in Chennai was in November 2017 in Ennore.https://t.co/pONoFDlXq3
— Pradeep John (Tamil Nadu Weatherman) (@praddy06) November 26, 2020
அவர் பதிவிட்ட வீடியோவில் பழைய மகாபலிபுரம் சாலையில், ஹிராநந்தனி அபார்ட்மென்ட் அருகே செல்லும் பக்கிங்காம் கால்வாயில் வெள்ள நீர் செல்கிறது. இதில் நேற்று சிறிய சூறாவளி போல் சுழல் உருவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்