வேலூர் கோட்டையை பிடிக்கப் போவது யார்? பாராளுமன்ற தேர்தல் முடிவில் புதிய திருப்பம்... முன்னணி நிலவரம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வேலூர் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.

வேலூர் கோட்டையை பிடிக்கப் போவது யார்? பாராளுமன்ற தேர்தல் முடிவில் புதிய திருப்பம்... முன்னணி நிலவரம்...!

வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் கடந்த 5 -ம் தேதி நடைபெற்றது. இதில் திமுக சார்பில் கதிர் ஆனந்த், அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகம் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உள்ளிட்ட 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஓட்டுப்பதிவு முடிந்ததும் வாக்கு இயந்திரங்கள் ராணிபேட்டையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை 8 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதற்கட்டமாக எண்ணப்பட்ட தபால் வாக்குகளில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலை வகித்தார். இதனைத் தொடர்ந்து நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்தை விட 14683 வாக்குகள் முன்னிலை பெற்று வருகிறார். தொடர்ந்து முன்னிலையில் இருந்த ஏ.சி. சண்முகத்தை திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் திடீரென பின்னுக்கு தள்ளினார். தற்போது வெளியான நிலவரப்படி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 14,921 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறார்.

AIADMK, DMK, VELLORELOKSABHAELECTION, VELLOREELECTION