மொத்தம் 75,000 ஆயிரம் ஊழியர்களை... வீட்டுக்கு 'அனுப்பிய' நிறுவனங்கள்... அதிர்ந்து போன 'தமிழக' மாவட்டம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா ஊரடங்கால் தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் பணிபுரிந்த 75 ஆயிரம் பேர் வேலையிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தோல் பதனிடும் தொழிற்சாலைகள் மற்றும் அதைச் சேர்ந்த நிறுவனங்களில் சுமார் 1.5 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர்.
கொரோனா ஊரடங்கு எதிரொலியால், பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இதுகுறித்து பேசிய அதிகாரி ஒருவர், இந்த ஊரடங்கால் சுமார் 50 விழுக்காடு தோல் பதனிடும் தொழிற்சாலை ஊழியர்கள் வேலை இழந்திருப்பதாக தெரிவித்தார். இத்தகைய தொழிற்சாலைகளில் வேலை செய்வோர் பெரும்பாலும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், வேலூர் மட்டுமின்றி ஆம்பூர், வானியம்பாடி, ராணிப்பேட்டை முதலிய இடங்களில் அமைந்திருக்கும் தோல் தொழிற்சாலைகளும் ஆட்குறைப்பு செய்து வருகின்றன. இதன் காரணமாக, தோல் தொழிற்சாலைகள் ஊழியர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்