நில அதிர்வு குறித்து ஆய்வு செய்து கொண்டிருந்தபோதே ஏற்பட்ட ‘நில அதிர்வு’.. அதிகாரிகள் சொன்ன தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நில அதிர்வு தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளும் போது நில அதிர்வு ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு நில அதிர்வு ஏற்பட்டது. நேற்று முன்தினம் வேலூரில் இருந்து 50 கிலோமீட்டர் மேற்கு-வடமேற்கு பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.5 புள்ளியாக இருந்ததாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டது.
குடியாத்தம், பேரணாம்பட்டு ஆகிய பகுதிகளில் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. வேலூர் அருகே இதுபோன்று அடிக்கடி நில அதிர்வு ஏற்பட்டு வருவதால அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது.
இந்த நிலையில் இந்த நில அதிர்வு தொடர்பாக அதிகாரிகள் நேற்று வேலூரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஆய்வு மேற்கொண்டிருக்கும்போதே சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டதாக, வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து நில அதிர்வால் பாதிக்கப்பட்ட வீடுகளில் இருந்தவர்கள் முகாம்களில் தங்க நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் நில அதிர்வு தொடர்பாக மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மற்ற செய்திகள்