'சிசிடிவி கேமராவ திருப்பி வச்சிருக்காங்க...' 'உடனே வீட்ல போய் பாருங்க...' செல்போன்ல பார்த்து ஷாக்...' - வீட்டுக்கு போனவங்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வேலூரில் பிரபலமான அம்மா பிரியாணி கடை உரிமையாளரின் வீட்டில் 110 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே இயங்கிவருகிறது பிரபலமான அம்மா பிரியாணி கடை. அதன் உரிமையாளர் கணேசபுரத்தைச் சேர்ந்த 60 வயதான மோகன். கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நிலை பாதிக்கப்பட்ட மோகன், சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று (22.11.2010) அவரை பார்க்க வேலூரில் இருந்து குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு சென்னைக்கு சென்றிருந்தனர்.
இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சிலர் நேற்று நள்ளிரவு வீட்டின் பின்பக்க கதவை நள்ளிரவில் உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகைகள், பணத்தை திருடிச் சென்றுள்ளனர். அதுமட்டுமில்லாமல் அவரது வீட்டில் வைத்திருந்த கண்காணிப்பு சிசிடிவி கேமராவையும் திசைதிருப்பி சென்றுள்ளனர்.
சென்னை மருத்துவமனைக்கு வந்த மோகன் குடும்பத்தினர் செல்போன் மூலம் வீட்டிலுள்ள கண்காணிப்பு சிசிடிவி கேமரா காட்சிகளை கவனித்தபோது கேமரா திசை திருப்பப்பட்டிப்பது தெரியவந்தது. இதனால் சந்தேகமடைந்து அப்பகுதியில் இருக்கும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து வீட்டை பார்க்க சொல்லியுள்ளனர்.
அதையடுத்து வீட்டை திறந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 110 பவுன் நகைகள், ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டது தெரியவந்தது. உடனடியாக இக்கொள்ளை சம்பவம் குறித்து வேலூர் தெற்கு காவல்துறையினர் நள்ளிரவில் திருட்டு நடைபெற்ற வீட்டுக்குச் செந்று தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும், கைரேகை நிபுணர்கள் மூலமாகவும் தடயங்களை சேகரிக்கப்பட்டும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகின்றது.
மற்ற செய்திகள்