"குற்றப் பரம்பரை நாவலை படமாக்க தமிழ்ல இயக்குனர்களே இல்ல".. "ராஜமௌலி மாதிரி ஆளுங்க".. எழுத்தாளர் வேல‌. ராமமூர்த்தி EXCLUSIVE

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

குற்றப் பரம்பரை நாவல் படமாவது குறித்து நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேக பேட்டியில் எழுத்தாளர் வேல‌. ராமமூர்த்தி பதில் அளித்துள்ளார்.

"குற்றப் பரம்பரை நாவலை படமாக்க தமிழ்ல இயக்குனர்களே இல்ல".. "ராஜமௌலி மாதிரி ஆளுங்க".. எழுத்தாளர் வேல‌. ராமமூர்த்தி EXCLUSIVE

Images are subject to © copyright to their respective owners.

தமிழ் இலக்கிய சூழலில் பிரபல எழுத்தாளராக வலம் வருபவர் வேல. ராமமூர்த்தி. தமிழ் சினிமாவில் குணசித்திர, வில்லன் வேடங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றவர். குறிப்பாக மதயானைகூட்டம், சேதுபதி, கிடாரி, கொம்பன், பாயும் புலி, வனமகன், அறம், அண்ணாத்த ஆகிய படங்கள் முக்கியமானவை.

கிடாரியில் இவர் செய்த கொம்பையா பாண்டியன் கதாபாத்திரம் தமிழ் சினிமா வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு பாத்திரம் என்றால் மிகையாகாது. கமுதி பெருநாழியைச் சார்ந்த எழுத்தாளர் வேல. ராம மூர்த்தி. இவர் தற்போது மதுரையில் வசித்து வருகிறார்.

Vela Ramamoorthy about Kutra Parambarai Movie Making

இவர் எழுதிய குற்றப்பரம்பரை, குருதி ஆட்டம், பட்டத்து யானை உள்ளிட்ட தமிழ் நாவல்கள்  புகழ்பெற்றவை. மேலும் இவர் எழுதிய சிறுகதைகளும் புகழ் பெற்றவை.

சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலாகும் பிராண்மலை படத்தின் "இளந்தாரி பய" வசனம் இவரை ரசிகர்கள் டிரெணடாக்கி வருகிறது. இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை வேல. ராமமூர்த்தி அளித்துள்ளார்.

Vela Ramamoorthy about Kutra Parambarai Movie Making

அதில் தனது சினிமா வாழ்க்கை மற்றும் ராணுவ வாழ்க்கை ஆகியவற்றை பகிர்ந்துள்ளார். மேலும் குற்றப் பரம்பரை நாவல் படமாவது குறித்த கேள்விக்கும் பதில் அளித்துள்ளார். "4-5 வருடங்களுக்கு முன் குற்றப் பரம்பரை நாவலை யார் இயக்குவார்கள் என்று இரண்டு பெரும் இயக்குனர்களுக்கு நடுவில் விவாதம் எழுந்தது. ஒரு பக்கம் பாரதிராஜா, இன்னொரு பக்கம் பாலா. உங்களுக்கு யார் எடுத்து இயக்கி இருந்தால் நியாயம் சேரத்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்?" என்ற கேள்விக்கு "என்னைப் பொறுத்தவரை, தமிழ் சினிமாவினர் தப்பா நினைச்சுக்கிட்டாலும் சரி. குற்றப் பரம்பரை நாவலை இயக்குவதற்கு தமிழில் இயக்குனர்களே இல்லை.

ராஜமௌலி மாதிரி ஆளுங்க பண்ணும். அவ்வளவு பெரிய பட்ஜெட்டில் அந்த நாவலை படமாக்க வேண்டும். அது கண்டிப்பாக வரும். அப்படி வரும்போது படமாகவோ, வெப் சீரியஸாக வரும் போது நான் கூட இருப்பேன். எழுத்தில் இருந்த தாக்கம் படத்திலும் இருக்கும்." என வேல. ராமமூர்த்தி பதில் அளித்தார்.

செம்மலரில் தொடராக வெளிவந்த குற்றப் பரம்பரை நாவல், கொம்பூதி கிராமத்து கள்ளர் மக்களின் வாழ்க்கையை கருவாக வைத்து எழுதப்பட்டது.

KUTRA PARAMBARAI, VELA RAMAMOORTHY, BALA, BHARATHI RAJA

மற்ற செய்திகள்