சென்னையில் காய்கறி மற்றும் இறைச்சி விலை குறைவு!? தற்போதைய நிலவரம் என்ன?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் ஊரடங்கு காரணத்தால் காய்கறி மற்றும் இறைச்சியின் விலை கணிசமாக குறைந்துள்ளது. 

சென்னையில் காய்கறி மற்றும் இறைச்சி விலை குறைவு!? தற்போதைய நிலவரம் என்ன?

பெரிய வெங்காயம் - ரூ.40, சின்ன வெங்காயம் - ரூ.150, தக்காளி - ரூ.15 முதல் 20, உருளை - ரூ.45, கத்திரிக்காய் - ரூ.60, முட்டை கோஸ் - ரூ.30, பீட்ரூட் - ரூ.40, பீன்ஸ் - ரூ.120 முதல் 150, காலிஃபிளவர் - ரூ.10, வெண்டைக்காய் - ரூ.60, பூண்டு - ரூ.220 முதல் 240, கேரட் - ரூ.50, முருங்கைக்காய் - ரூ.90, இஞ்சி - ரூ. 100, கீரைக்கட்டு - ரூ.15

கோயம்பேடு சந்தை செயல்படாததால், சென்னையில் மற்ற பகுதியில் இயங்கும் மார்கெட் பகுதிகளில் காய்கறிகள் வந்து இறங்குகின்றன. அங்கு ஒரு சில காய்கறிகள் விலை ஏற்ற இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. திருமழிசை மார்கெட் நாளை செயல்பாடுகளுக்கு வந்த பிறகு மேலும் காய்கறிகள் விலை குறைய வாய்ப்பு இருப்பதாக வியாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், மீன்கள் மற்றும் இறைச்சியைப் பொறுத்தமட்டில், இறால் - ரூ.300, வவ்வால் - ரூ.550 முதல் 600, சங்கரா - ரூ.350, பாறை - ரூ.350 முதல் 400, வஞ்சரம் - ரூ.800 என விற்கப்படுகிறது.

சென்னையில் ஆட்டுக் கறி விலை ஒரு கிலோ ரூ.940 முதல் 1000 வரை விற்பனையாகிறது. சிக்கன் ரூ.200 முதல் 220 வரை விற்கப்படுகிறது.